சுடச்சுட

  


  பெரியநாயக்கன்பாளையம் அருகே ஜோதிடரை வீட்டில் அடைத்து வைத்து பணம் பறித்த கும்பல் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
  சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் வட்டம் புலியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பாலமுருகன் (33). நீர் ஜோதிடராக உள்ளார். இவரை கோவை மாவட்டம், தெற்குபாளையத்தைச் சேர்ந்த குபேந்திரன், காயத்ரி தம்பதி அணுகி ஜோதிடம் பார்த்துள்ளார்.
   அப்போது, குடும்பத்தில் தோஷம் இருப்பதால் பரிகாரம் செய்ய வேண்டும். அதற்கு அதிக பணம் செலவாகும் என பாலமுருகன் கூறியுள்ளார். பரிகாரத்தை தங்களது வீட்டில் செய்து தர குபேந்திரன் கேட்டுள்ளனர்.
  இதனை நம்பி கடந்த சில நாள்களுக்கு முன்பு ஜோதிடர் பாலமுருகன் தெற்குபாளையம் வந்துள்ளார். பின்னர் குபேந்திரன் வீட்டில் பரிகார பூஜை நடந்து கொண்டிருந்தபோது பாலமுருகனை போலி ஜோதிடர் எனக் கூறி தம்பதி உள்ளிட்ட சிலர் தாக்கியுள்ளனர்.
  பின்னர் வீட்டில் அடைத்து வைத்து பணம் கேட்டு மிரட்டியுள்ளார். இதையடுத்து, மதுரையில் உள்ள பாலமுருகனின் உறவினர் மூலம் குபேந்திரன் ஆட்கள் பணம் பெற்றுள்ளனர். இதைத் தொடர்ந்து அந்த கும்பல் பாலமுருகனை வாகனத்தில் அழைத்துச் சென்று மேட்டுப்பாளையம் அருகே இறக்கி விட்டு தப்பிச் சென்றுள்ளனர். 
  இதுகுறித்து பாலமுருகன் அளித்த புகாரின் பேரில் பெ.நா.பாளையம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai