சுடச்சுட

  


  கோவை மாவட்டத்தில் மக்களவைத் தேர்தலையொட்டி அமைக்கப்பட்டுள்ள பறக்கும் படை உள்ளிட்ட குழுக்களின் வாகனங்களை கண்காணிக்க ஜி.பி.எஸ். கருவி பொருத்தப்பட்டு வருகின்றன. 
  கோவை மாவட்டத்தில், மக்களவைத் தேர்தலையொட்டி கோவை, பொள்ளாச்சி ஆகிய இரண்டு தொகுதிகளிலும் 30 பறக்கும் படைக் குழுக்கள், 30 நிலையான குழுக்கள் மற்றும் 20 விடியோ குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
   ஒவ்வொரு சட்டப்பேரவைத் தொகுதியிலும் சுழற்சி முறையில் 24 மணிநேரமும் 8 குழுக்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர். இக்குழுக்கள் ஆய்வுக்காக குறிப்பிட்ட மணி நேரத்துக்கு ஒருமுறை ஆய்வு செய்யும் இடத்தை மாற்றவும்  அறிவுறுத்தப்பட்டுள்ளது.
   இந்நிலையில், பறக்கும் படை உள்ளிட்ட குழுக்களின் செயல்பாடுகளை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள தேர்தல் கட்டுப்பாட்டு அறையில் இருந்து கண்காணிக்கும் வகையில் குழுக்களுக்கு வழங்கப்பட்டுள்ள வாகனங்களில் ஜி.பி.எஸ். கருவி பொருத்தப்பட்டு வருகிறது. முதற்கட்டமாக 20 வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ளதாகவும் படிப்படியாக 80 வாகனங்களிலும் ஜி.பி.எஸ். கருவி பொருத்தப்படும் என தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதன் மூலம் பறக்கும் படை, நிலையான குழுக்களின் செயல்பாடுகளை தேர்தல் கட்டுப்பாட்டு அறைகளில் இருந்தே தெரிந்துக்கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளனர். 
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai