சுடச்சுட

  


  ஒருதலைப் பட்சமாக செயல்படும் மதுக்கரை காவல் ஆய்வாளரை இடமாற்றம் செய்யக் கோரி திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சார்பில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) உமா மகேஸ்வரியிடம் சனிக்கிழமை மனு அளித்தனர். 
  இது தொடர்பாக திமுக மதுகரை ஒன்றியச் செயலாளர் ராஜசேகரன் தலைமையில் எதிர்கட்சியினர் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:
   கோவை மாவட்டம், பேரூர் சரகத்துக்கு உள்பட்ட மதுக்கரை காவல் அய்வாளர் காவல் நிலையத்துக்கு புகார் அளிக்க வரும் ஆளும் கட்சி அல்லாதவர்களையும், பொது மக்களையும் அலைக்கழித்து வருகிறார்.
   மேலும் மரியாதைக் குறைவாக நடத்துவதுடன், ஒருமையிலும் பேசுகிறார். திமுக சார்பில் கிராம சபைக் கூட்டம் நடத்த மூன்று வாரங்களுக்கு முன் அனுமதி கேட்ட நிலையில், கடைசி நேரத்தில் அனுமதி மறுக்கப்பட்டது.
   ஆளும் கட்சிக்கு சாதகமாக செயல்பட்டு வருகிறார். ஒருதலைப் பட்சமாக செயல்படும் காவல் ஆய்வாளரை இடமாற்றம் செய்ய வேண்டும் என்று மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai