தேர்தல் பாதுகாப்புப் பணி: 163 துணை ராணுவப் படை வீரர்கள் கோவை வந்தனர்

கோவை மாவட்டத்தில், தேர்தல் பாதுகாப்புப் பணிக்காக இந்தோ-திபெத்திய எல்லை பாதுகாப்புப் படை வீரர்கள் 163 பேர் சனிக்கிழமை கோவைக்கு வந்தனர். 


கோவை மாவட்டத்தில், தேர்தல் பாதுகாப்புப் பணிக்காக இந்தோ-திபெத்திய எல்லை பாதுகாப்புப் படை வீரர்கள் 163 பேர் சனிக்கிழமை கோவைக்கு வந்தனர். 
பதினேழாவது மக்களவைத் தேர்தலுக்கு கோவை மாவட்டத்தில் கோவை, பொள்ளாச்சி ஆகிய இரண்டு தொகுதிகளிலும் 3 ஆயிரத்து 72 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், 470 வாக்குச்சாவடி மையங்கள் பதற்றமானவை என்றும், 117 வாக்குச்சாவடிகள் மிகப்பதற்றமானவை என்றும் கண்டறியப்பட்டுள்ளன.
இங்கு பாதுகாப்புக்காக துணை ராணுவப்படை வீரர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுவர் என தேர்தல் அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். அதன்படி இந்தொ - திபெத்திய எல்லை பாதுகாப்புப் படை வீரர்கள் தேர்தல் பணிக்காக சனிக்கிழமை கோவைக்கு வந்தனர்.
 இரண்டு கம்பெனியைச் சேர்ந்த 163 வீரர்கள் வந்துள்ளனர். இவர்களில், 81 வீரர்கள் கோவையிலும், மற்ற வீரர்கள் மதுரை மாவட்டத்திலும் தேர்தல் பணியில் ஈடுபடவுள்ளதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தற்போது, சிங்காநல்லூரில் மாநகராட்சிக்கு சொந்தமான கட்டடத்தில் தங்க வைக்கப்பட்டுள்னர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com