பொள்ளாச்சி திமுக வேட்பாளர் கு.சண்முகசுந்தரம் மனு தாக்கல்

பொள்ளாச்சி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கு. சண்முகசுந்தரம் வெள்ளிக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தார்.

பொள்ளாச்சி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கு. சண்முகசுந்தரம் வெள்ளிக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தார்.
திமுக வேட்பாளர் கு.சண்முகசுந்தரம் தனது ஆதரவாளர்களுடன் பொள்ளாச்சி சார்ஆட்சியர் அலுவலகத்தில் கோட்டாட்சியர் ரவிக்குமாரிடம் மனு தாக்கல் செய்தார். அவருடன் முன்னாள் அமைச்சர் கண்ணப்பன், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் மாவட்ட செயலாளர் நித்தியானந்தம், காங்கிரஸ் மாவட்ட செயலாளர் சக்திவேல், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தாலுகா செயலாளர் மகாலிங்கம் ஆகியோர் உடன் வந்தனர். இவர் தனது மனுவுடன் கூடுதலாக 3 வேட்பு மனுக்களை தாக்கல் செய்தார். மேலும் மாற்று வேட்பாளராக தனது மனைவி வனிதா பெயரில் ஒரு வேட்புமனு தாக்கல் செய்தார்.            
சொத்து விவரம்: கு.சண்முகசுந்தரம், தனது பெயரில் ரூ. 2 கோடியே 17 லட்சத்து 62  ஆயிரத்து 180  மதிப்பில் அசையும் சொத்துகளும், அசையா சொத்தாக ரூ. 82 லட்சத்து 53 ஆயிரத்து 588-ம், சுய சம்பாத்தியமாக ரூ. 2 கோடியே 87 லட்சமும், குடும்பசொத்தாக ரூ. 1 கோடியே 90 லட்சமும், வங்கிக் கடனாக ரூ.1 கோடியே 5 லட்சத்து 274-ம்  உள்ளதாக வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ளார். இவரது மனைவி வனிதா  பெயரில் அசையும் சொத்தாக ரூ. 64 லட்சத்து 45 ஆயிரத்து  36-ம், அசையா சொத்தாக ரூ. 1 கோடியே 73  லட்சத்து 44 ஆயிரமும், காலியிடம் மற்றும், கட்டடம் ரூ.1 கோடியே 66 லட்சத்து 65 ஆயிரத்து 221-ம், சுய சம்பாத்தியமாக ரூ. 3 கோடியே 23 லட்சத்து 50 ஆயிரமும், பரம்பரை சொத்தாக ரூ.2 கோடியே 26 லட்சமும், வங்கிக் கடனாக ரூ. 28 லட்சத்து 60 ஆயிரத்து 365-ம் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். இவரது மகள் எஸ். நிகரிகா பெயரில் அசையும் சொத்தாக ரூ. 22 லட்சத்து 52 ஆயிரத்து 68 உள்ளதாகத்  தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com