மாரியம்மன் கோயிலுக்கு முளைப்பாரி ஊர்வலம்
By DIN | Published On : 24th March 2019 03:33 AM | Last Updated : 24th March 2019 03:33 AM | அ+அ அ- |

மேட்டுப்பாளையம் மைதானம் மாரியம்மன் கோயிலின் 91 ஆம் ஆண்டு குண்டம் திருவிழாவையொட்டி அம்மனுக்கு முளைப்பாரி ஊர்வலம் சனிக்கிழமை நடைபெற்றது.
மேட்டுப்பாளையம் நகராட்சி 7ஆவது வார்டில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இருந்து 500க்கு மேற்பட்ட மக்கள் விரதமிருந்து முளைப்பாரியை ஊர்வலவமாக எடுத்து வந்தனர்.
அப்போது பக்தர்கள் பச்சகாளி, பவழக்காளி, பெருமாள், சிவன், பார்வதி, கருப்பராயன் உள்ளிட்ட சுவாமிகளின் வேடமணிந்து ஊர்வலமாக வந்து மைதானம் மாரியம்மனுக்கு நேர்த்திக் கடன் செலுத்தினர்.
இதைத் தொடர்ந்து 500 இளநீர் கொண்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜை நடைபெற்றன. இதற்கான ஏற்பாடுகளை முன்னாள் அறங்காவலர்கள் வெள்ளியங்கிரி, பாலன் மற்றும் வார்டு மக்கள் ஆகியோர் செய்திருந்தனர்.