Enable Javscript for better performance
வாகை விவேகானந்தா கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத் தேர்தல் செல்லாது: மறு தேர்தல் நடத்த விசாரணை ஆணையம- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    வாகை விவேகானந்தா கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத் தேர்தல் செல்லாது: மறு தேர்தல் நடத்த விசாரணை ஆணையம் உத்தரவு

    By DIN  |   Published On : 24th March 2019 03:31 AM  |   Last Updated : 24th March 2019 03:31 AM  |  அ+அ அ-  |  


    அன்னூர் அருகே உள்ள வாகராயம்பாளையம் விவேகானந்தா கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்க நிர்வாகக் குழு உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க நடந்த தேர்தல் செல்லாது என்று கூட்டுறவுத் தேர்தல் வழக்குகளுக்கான விசாரணைக் குழு சனிக்கிழமை உத்தரவிட்டுள்ளது.
    கோவை மாவட்டம், அன்னூர் அருகே உள்ள வாகராயம்பாளையத்தில் விவேகானந்தா கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கம்  செயல்பட்டு வருகிறது. இந்தச் சங்கம் கடந்த 2014-ஆம் ஆண்டு முதல் எங்கு செயல்படுகிறது என்பது தெரியாமல் இருந்தது. இந்தச் சங்கத்துக்கு நிர்வாகக் குழு உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் அறிவிக்கப்பட்டு, போட்டியிடும் உறுப்பினர்களிடம் அன்னூர், தென்னம்பாளையம் சாலையில் உள்ள காமாட்சியம்மன் கைத்தறி நெசவாளர் கூட்டுறவுச் சங்கத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் ராஜேந்திரன் கடந்த 2018 ஏப்ரல் 9ஆம் தேதி விருப்ப மனுக்களைப் பெற்றார். 8 பேர் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர். இதில் வாகராயம்பாளையத்தைச் சேர்ந்த ஆர்.சிவகுமார் என்பவரும் மனு தாக்கல் செய்திருந்தார்.
    இந்நிலையில் தேர்தல் நடத்தும் அலுவலரால் 2018 ஏப்ரல் 23ஆம் தேதி வேட்பு மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டன. அதில் ஆர்.சிவகுமார் வேட்பு மனு மட்டும் தள்ளுபடி செய்யப்பட்டது. மீதம் உள்ள ஏழு பேரின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டு போட்டியின்றி நிர்வாகக் குழு உறுப்பினர்களாகத் தேர்வு செய்யப்பட்டதாக தேர்தல் நடத்தும் அலுவலர் ராஜேந்திரன் அறிவித்தார்.
    இதற்கு ஆர்.சிவகுமார் ஆட்சேபணை தெரிவித்தார். பிரவேசப் புத்தகத்தில் உள்ள கையெழுத்தும், வேட்பு மனுவில் உள்ள கையெழுத்தும் மாறுபட்டுள்ளதால் வேட்பு மனுவை தள்ளுபடி செய்ததாக தேர்தல் அலுவலர் ராஜேந்திரன் தெரிவித்தார்.
    இதையடுத்து ஓய்வுபெற்ற நீதியரசர் ராஜேஷ்வரன் தலைமையிலான கூட்டுறவு தேர்தல் வழக்குகளுக்கான விசாரணைக் குழு (மேற்கு மண்டலம்) ஆணையத்துக்கு ஆர்.சிவகுமார் 2018 செப்டம்பர் 29ஆம் தேதி புகார் மனு அனுப்பினார். இந்த ஆணையத்தில் கோவை, திருப்பூர் மாவட்ட ஆட்சியர்கள், கோவை, திருப்பூர் மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர் உள்ளிட்டோர் விசாரணை அதிகாரிகளாக உள்ளனர்.
    இதையடுத்து சங்கத்தில் நடைபெற்ற தேர்தலில் முறைகேடு நடந்தது குறித்து கோவை மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி அலுவலகத்தில் ஆர்.சிவகுமார், தேர்தல் நடத்தும் அலுவலர், கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர், அரசு வழக்குரைஞர் தாமோதரன் ஆகியோரிடம் ஓய்வுபெற்ற நீதியரசர் ராஜேஷ்வரன் தலைமையிலான குழுவினர் சனிக்கிழமை (மார்ச் 23) விசாரணை நடத்தினர். 
    இதில், தேர்தலில் முறைகேடு நடந்தது தெரியவந்தது. மேலும் பிரவேசப் புத்தகத்தில் உள்ள ஆர்.சிவகுமார் கையெழுத்தும், வேட்பு மனுவில் உள்ள கையெழுத்தும் ஒரே கையெழுத்துதான் என்று விசாரணை ஆணையர் தெரிவித்தார். இதையடுத்து வாகை விவேகானந்தா கூட்டுறவுச் சங்கத்துக்கு நடைபெற்ற தேர்தல் செல்லாது என்றும் இந்தச் சங்கத்தின் தலைவராக இருக்கும் சண்முகசுந்தரம், துணைத் தலைவர் ஜெயபால், நிர்வாகக் குழு உறுப்பினர்கள் அழகிரிசாமி, ஆர்.சுப்பிரமணி, ஆர்.நடராஜ் உள்ளிட்டோரின் பதவிகள் செல்லாது என்றும் விசாரணை ஆணையம்  உத்தரவிட்டது.
    மேலும், ஆர்.சிவகுமாரின் வேட்பு மனுவை ஏற்றுக்கொண்டு இந்தச் சங்கத்துக்கு மே மாதத்துக்குப் பிறகு தேர்தல் நடத்துவதற்கு இறுதி உத்தரவு பிறப்பிக்கப்படும் என்றும் விசாரணை ஆணையம் உத்தரவிட்டது.
     


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp