Enable Javscript for better performance
குண்டர் சட்டத்தின் கீழ் இருவர் கைது- Dinamani

சுடச்சுட

    

    கோவையில் கஞ்சா விற்ற வழக்கில் இருவரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாநகர காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
    கோவையில் கல்லூரி மாணவர்கள், பொதுமக்களுக்கு கஞ்சா விற்பனை செய்பவர்களைக் கண்காணித்து கைது செய்ய மாநகர காவல் ஆணையர் சுமித் சரண் உத்தரவிட்டிருந்தார். இதன்பேரில் கோவை மாநகர துணை ஆணையர் (சட்டம், ஒழுங்கு) எஸ்.பாலாஜி சரவணன், உதவி ஆணையர் (சட்டம், ஒழுங்கு) என்.வெங்கடேசன் ஆகியார் தலைமையில் போலீஸார் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு இருந்தனர்.
    இந்நிலையில், ஜி.எம்.நகர் கழிவுநீர் பண்ணைக்குச் செல்லும் வழியில் உள்ள மாநகராட்சிக் கட்டணக் கழிப்பறை அருகே கஞ்சா விற்கப்படுவதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. இதன்பேரில் சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸார் அங்கிருந்த கரும்புக்கடை பகுதியைச் சேர்ந்த நௌஷத் (32) என்பவரைக் கைது செய்தனர்.  இதையடுத்து, அவரிடம் இருந்து 1.3 கிலோ கஞ்சாவைப் பறிமுதல் செய்த போலீஸார் அவரை சிறையில் அடைத்தனர். 
    இதேபோல, மஜீத் காலனி பகுதியிலுள்ள தேநீர் கடை அருகே வைத்து உக்கடத்தைச் சேர்ந்த பஷீர் என்பவரைக் கைது செய்த போலீஸார் அவரிடம் இருந்து 1.2 கிலோ கஞ்சாவைப் பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர்.  இவர்கள் இருவர் மீதும் ஏற்கெனவே கஞ்சா விற்ற வழக்கு நிலுவையில் இருப்பதால், இவர்களை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாநகர காவல் ஆணையர் சுமித் சரண் உத்தரவிட்டார். இதன்பேரில் இருவரும் குண்டர் சட்டத்தின் கீழ் புதன்கிழமை கைது செய்யப்பட்டனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai