Enable Javscript for better performance
கே.ஐ.டி. கல்லூரியில் சர்வதேச கருத்தரங்கு- Dinamani

சுடச்சுட

    

    கோவை கண்ணம்பாளையம் கலைஞர் கருணாநிதி தொழில்நுட்பக் கல்லூரியில், அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், மேலாண்மைத் துறைகள் இணைந்து சர்வதேச கருத்தரங்கம் அண்மையில் நடைபெற்றது.
    கல்லூரியின் கருத்தரங்கக் கூடத்தில் நடைபெற்ற இந்தக் கருத்தரங்கில், அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் உதவி இயக்குநர் ஆர்.சக்திவேல், அமிர்தா பல்கலைக்கழகப் பொறியியல் துறை துணை முதல்வர் எஸ்.மகாதேவன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாகக் கலந்து கொண்டனர். கருத்தரங்கில், கல்லூரியின் துணைத் தலைவர் இந்து முருகேசன், நிர்வாக அறங்காவலர் ஏ.சூர்யா, இயக்குநர் பொன்.அன்பழகன், முதல்வர் என்.மோகன்தாஸ் காந்தி, துணை முதல்வர் எம்.ரமேஷ், பேராசிரியர் சி.தீபா, துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.
    இந்தக் கருத்தரங்கில், பல்வேறு நாடுகளின் பொறியியல் கல்லூரிகளைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள், ஆராய்ச்சியாளர்கள் கலந்து கொண்டனர். மேலும், ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆராய்ச்சிக் கட்டுரைகள் பெறப்பட்டதில், அவற்றில் 500 கட்டுரைகள் இந்தக் கருத்தரங்கில் விவாதிக்கப்பட்டதாக கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai