Enable Javscript for better performance
தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்திய 5 பேருக்கு அபராதம்- Dinamani

சுடச்சுட

    

    தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்திய 5 பேருக்கு அபராதம்

    By DIN  |   Published on : 28th March 2019 09:36 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மேட்டுப்பாளையம் அருகே உள்ள காரமடை பேரூராட்சிப் பகுதியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தியதாக 5 பேருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 
    காரமடை பேரூராட்சி செயல் அலுவலர் சுரேஷ்குமார் தலைமையில் சுகாதார ஆய்வாளர் பரமசிவம் மேற்பார்வையில் சுகாதாரப் பணியாளர்கள் காரமடை பஜார், சந்தைக் கடை வீதி, கடை வீதி, பேருந்து நிலையம், மார்க்கெட் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடைகளில் சோதனை நடத்தினர்.
    அப்போது, தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தியதாக 5 பேருக்கு தலா ரூ.5 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.25 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai