Enable Javscript for better performance
நீர் மேலாண்மைத் தொழில்நுட்ப திட்ட துவக்க விழா- Dinamani

சுடச்சுட

    

    தேக்கம்பட்டி ஐடிசி நிர்வாகம், கூடு தன்னார்வ அமைப்பு, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் சார்பில் நீர் மேலாண்மைத் தொழில்நுட்பத் திட்ட துவக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
    தாயனூரில் நடைபெற்ற விழாவில் கூடு  தன்னார்வ அமைப்புச் செயலாளர் கதிரேசன் வரவேற்றார். ஐ.டி.சி. தேக்கம்பட்டி கிளை மேலாளர் பிரணவ் சர்மா தலைமை வகித்தார். மனிதவள மேலாளர் ஏ.வி.எம்.சதீஷ்குமார் முன்னிலை வகித்தார்.
    விழாவில், கெம்மாரம்பாளையம், வெள்ளியங்காடு, தோலம்பாளையம், மருதூர், தேக்கம்பட்டி, நெல்லித்துறை  உள்ளிட்ட ஊராட்சிகளில் 2015 ஆம் ஆண்டு ஒருங்கிணைந்த நீர் மேலாண்மைத் திட்டத்தின் கீழ் விவசாயிகளின் நலனுக்காக குளம், குட்டைகள் தூர் வாருதல், தடுப்பணை கட்டுதல், குட்டை அமைத்தல், விவசாயிகளின் நிலத்தில் உரம் தயாரிப்பதற்கானத் தொட்டி அமைக்க பயிற்சி அளித்தல், நீர் மேலாண்மைப் பயிற்சி,  சொட்டு நீர் பாசன வழிகாட்டுதல் ஆகிய திட்டங்கள் துவங்கப்பட்டன.
    இதில் கோவை வேளாண்மைப் பல்கலைக்கழக நீர் நுட்பவியல் மையத் தலைவர் டாக்டர் எஸ்.பன்னீர்செல்வம், தமிழ்நாடு பாசனக் குழும துணைத் தலைவர் இளங்கோவன்,  நபார்டு வங்கி உதவிப் பொதுமேலாளர் வசீகரன், அவிநாசிலிங்கம் வேளாண் அறிவியல் நிலைய தலைவர் குமாரவேலு, ஐடிசி சமூகப் பொறுப்புணர்வு திட்ட தமிழகப் பொறுப்பாளர் ஹரீஷ்பாபு உள்பட மேற்கண்ட ஊராட்சிகளைச் சேர்ந்த கிராம மக்கள் 100 க்கு  மேற்ப்பட்டோர் கலந்துகொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai