Enable Javscript for better performance
பாரதியார் பல்கலை.யில் எம்.ஃபில்., பிஎச்.டி. படிப்புகள்:ஜூன் 23 இல் நுழைவுத் தேர்வு- Dinamani

சுடச்சுட

    

    பாரதியார் பல்கலை.யில் எம்.ஃபில்., பிஎச்.டி. படிப்புகள்: ஜூன் 23 இல் நுழைவுத் தேர்வு

    By DIN  |   Published on : 28th March 2019 09:36 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் எம்.ஃபில்., பிஎச்.டி. படிப்புகளில் சேருவதற்கான பொது நுழைவுத் தேர்வு ஜூன் 23 ஆம் தேதி நடைபெறுகிறது.
    பாரதியார் பல்கலைக்கழகத்தின் துறைகளிலும், பல்கலைக்கழகத்தால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரிகள், ஆராய்ச்சி நிறுவனங்களிலும் முழு நேரம், பகுதி நேர எம்.ஃபில். படிப்பு, முழுநேர ஆராய்ச்சிப் படிப்பில் சேருவதற்கான நுழைவுத் தேர்வு ஜூன் 23 ஆம் தேதி காலை 11 மணி முதல் நண்பகல் 12.30 மணி வரை நடைபெறுகிறது.
    இதற்கான விண்ணப்பப் படிவங்கள், இதர விவரங்கள் உள்ளிட்டவற்றை மார்ச் 27 ஆம் தேதி முதல் ஏப்ரல் 26 ஆம் தேதி வரை பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பத்தை ஏப்ரல் 26 ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai