Enable Javscript for better performance
பாலியல் குற்றச்சாட்டு வழக்கில் திமுக பொதுக்குழு உறுப்பினர் கைது- Dinamani

சுடச்சுட

    

    பாலியல் குற்றச்சாட்டு வழக்கில் திமுக பொதுக்குழு உறுப்பினர் கைது

    By DIN  |   Published on : 28th March 2019 09:32 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வட மாநிலப் பெண்களுக்குப் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக திமுக பொதுக்குழு உறுப்பினரை ரயில்வே போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள இருவரைத் தேடி வருகின்றனர்.
     கோவை மாவட்டம், சூலூர் அருகே இருகூரைச் சேர்ந்தவர் திமுக பொதுக்குழு உறுப்பினர் சந்திரன். இவர் முன்பு இருகூர் பேரூராட்சித் தலைவராகப் பதவி வற்கித்துள்ளார். இந்நிலையில், சென்னையில் மார்ச் 8 ஆம் தேதி நடைபெற்ற திமுக வேட்பாளர்கள் நேர்காணலில் பங்கேற்ற சந்திரன், சூலூர் ஒன்றியச் செயலாளர் சன் ராஜேந்திரன், மாவட்டத் துணைச் செயலாளர் கபிலன் ஆகியோர் அன்றைய இரவே ரயிலில் கோவைக்கு திரும்பியுள்ளனர். 
     அப்போது, அவர்கள் பயணம் செய்த பெட்டியில் வட மாநிலத்தைச் சேர்ந்த பெண்கள் சிலர் வந்ததாகத் தெரிகிறது. இந்நிலையில், அந்தப் பெண்களிடம் அவர்களது இருக்கைகளை மேல் இருக்கைகளாக மாற்றிக் கொள்ளும்படி திமுகவினர் கூறியுள்ளனர். 
     இந்நிலையில், நள்ளிரவு நேரத்தில் ரயில் சேலத்தைக் கடக்கும்போது திடீரென பெண்கள் கூச்சலிட்டுள்ளனர். இதைக் கேட்டு அதே பெட்டியில் பயணம் செய்த மற்றொரு பயணி அவசரகால சங்கிலியைப் பிடித்து இழுத்து ரயிலை நிறுத்தியுள்ளார்.
     அப்போது, அங்கு வந்த ரயில்வே போலீஸார் விசாரணை நடத்தியபோது உடன் பயணம் செய்த பெண்களுக்குப் பாலியல்ரீதியாக தொந்தரவு கொடுத்ததாகக் கூறப்படுகிறது. பின்னர் அவர்களிடம்  கடிதம் பெற்றுக் கொண்ட ரயில்வே போலீஸார் பயணம் செய்ய அனுமதித்துள்ளனர்.
     இச் சம்பவத்தைத் தொடர்ந்து வடமாநில பெண்கள் சென்னை ரயில்வே போலீஸாரிடம்  புகார் அளித்துள்ளனர். இப்புகாரின் பேரில் சென்னை ரயில்வே போலீஸார் வழக்குப் பதிவு செய்து சேலம் ரயில்வே போலீஸாரின் உதவியுடன் சந்திரனை புதன்கிழமை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள சன் ராஜேந்திரன், கபிலன் ஆகியோரைத் தேடி வருகின்றனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai