Enable Javscript for better performance
பிரசாரப் பயணத்தை தொடங்கினார்: மார்க்சிஸ்ட் வேட்பாளர் பி.ஆர்.நடராஜன்- Dinamani

சுடச்சுட

    

    பிரசாரப் பயணத்தை தொடங்கினார்: மார்க்சிஸ்ட் வேட்பாளர் பி.ஆர்.நடராஜன்

    By DIN  |   Published on : 28th March 2019 09:33 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கோவை மக்களவைத் தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் பி.ஆர். நடராஜன் தனது பிரசாரத்தை புதன்கிழமை தொடங்கினார். 
    திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் கோவை மக்களவைத் தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் பி.ஆர்.நடராஜன் தனது தேர்தல் பிரசாரத்தை புதன்கிழமை தொடங்கினார்.
    கூட்டணி கட்சி நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டத்துக்குப் பின்னர் கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் உள்ள காய்கடை மைதானத்தில் இருந்து தனது பிரசாரத்தை துவங்கினார்.
    இந்தப் பிரசாரப் பயணத்துக்கு சிங்காநல்லூர் தொகுதி திமுக சட்டப்பேரவை உறுப்பினர் நா.கார்த்திக் தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் பிரசார பயணத்தை துவக்கி வைத்தார். பிரசாரத்துக்கான வாகனம் சிறிய ரக விமானத்தைப் போல வடிவமைக்கப்பட்டிருந்தது.
    இதையடுத்து, சிங்காநல்லூர் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட இடங்களில் வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார். இதில் திமுகவின் சொத்துப் பாதுகாப்புக் குழு தலைவரும், 
    முன்னாள் அமைச்சருமான பொங்கலூர் நா.பழனிசாமி, மதிமுக மாநகர் மாவட்டச் செயலாளர் ஆர்.ஆர்.மோகன்குமார், காங்கிரஸ் கட்சி நிர்வாகி கணபதி சிவக்குமார், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலப் பொருளாளர் எம்.ஆறுமுகம், மாவட்டச் செயலாளர் வி.எஸ்.சுந்தரம், மார்க்சிஸ்ட் கட்சியின், மாநிலக்குழு உறுப்பினர் சி.பத்மநாபன், கொங்கு நாடு மக்கள் தேசியக் கட்சியின் நிர்வாகி ஆர்.எஸ்.தனபால், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் ஜோ.இலக்கியன், நிலா மணிமாறன், மனிதநேய மக்கள் கட்சியின் நிர்வாகி ஜெம்பாபு, இந்திய ஜனநாயகக் கட்சியின் மணிமாறன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai