Enable Javscript for better performance
பொள்ளாச்சி பாலியல் விவகாரம்: பார் நாகராஜிடம் 5 மணி நேரத்துக்கு மேல் சிபிசிஐடி போலீஸார் விசாரணை- Dinamani

சுடச்சுட

    

    பொள்ளாச்சி பாலியல் விவகாரம்: பார் நாகராஜிடம் 5 மணி நேரத்துக்கு மேல் சிபிசிஐடி போலீஸார் விசாரணை

    By DIN  |   Published on : 28th March 2019 09:30 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பொள்ளாச்சி பாலியல் விவகாரம் தொடர்பாக பார் நாகராஜிடம் சுமார் 5 மணி நேரத்துக்கு  மேலாக சிபிசிஐடி போலீஸார் புதன்கிழமை விசாரணை நடத்தினர். 
    கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் பெண்களை ஆபாச விடியோ எடுத்து அவர்களிடம் அத்துமீறிய வழக்கில் பொள்ளாச்சியைச் சேர்ந்த திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஷ், வசந்தகுமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
    மேலும், புகார் கொடுத்த மாணவியின் சகோதரரைத் தாக்கிய "பார்' நாகராஜ், பாபு, செந்தில், வசந்த்குமார் ஆகியோர் மீதும் போலீஸார் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். இந்த வழக்கை தற்போது சிபிசிஐடி போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
    இதில் முக்கிய எதிரியான திருநாவுக்கரசின் நெருங்கிய நட்பு வட்டத்தில் இருந்ததாக அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட பார் நாகராஜ், திமுக கோவை தெற்கு மாவட்டப் பொறுப்பாளர் தென்றல் செல்வராஜின் மகன் தென்றல் மணிமாறன் (27) ஆகியோருக்கு சிபிசிஐடி போலீஸார் விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பி இருந்தனர்.  இதில் மார்ச் 28 ஆம் தேதிக்குள் கோவையில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்நிலையில், இந்த வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில், சிபிசிஐடி போலீஸார் ஏன் விசாரணைக்கு அழைக்க வேண்டும் என தென்றல் மணிமாறன் தரப்பு வழக்குரைஞர் சிபிசிஐடி அலுவலகத்தில் புதன்கிழமை மனு அளித்தார். 
    இந்நிலையில், சம்மன் அனுப்பப்பட்டதன் பேரில்,  புதன்கிழமை பிற்பகல் 3 மணி அளவில் கோவையில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்துக்கு  பார் நாகராஜ் வந்திருந்தார். அவரிடம் இரவு 9 மணி வரையில் சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தினர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai