Enable Javscript for better performance
மான் வேட்டை: ராணுவ வீரர் உள்பட 4 பேர் கைது- Dinamani

சுடச்சுட

    

    மேட்டுப்பாளையம் அருகே காரமடை வனச் சரகத்துக்கு உள்பட்ட குருந்தமலை அடிவாரத்தில் மான் வேட்டையாடியதாக ராணுவ வீரர் உள்பட 4 பேரை வனத் துறையினர் புதன்கிழமை கைது செய்தனர்.
    மேட்டுப்பாளையம் அருகே குருந்தமலை அடிவாரத்தில் 100 க்கு மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களையொட்டி விவசாய நிலம் உள்ளது. இந்நிலையில், வறட்சியின் காரணமாக கிராமங்களுக்கு அருகே உள்ள வனப் பகுதியில் இருந்து வன விலங்குகள் குடிநீர், உணவு தேடி குடியிருப்புகள், விவசாய நிலங்களுக்குள் ஊடுருவி வருகின்றன.
    இப்பகுதியில் சிலர் மான் வேட்டையாடுவதாக வனத் துறையினருக்கு திங்கள்கிழமை தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்துக்குச் சென்ற காரமடை வனச் சரக அலுவலர் சரவணன் தலைமையிலான வனத் துறையினர் மான் வேட்டையாடியதாக கவுண்டம்பாளையம் பகுதியைத் சேர்ந்த் ராணுவ வீரர் ரஞ்சித் (24). காரமடை பெரியார் நகரைச் சேர்ந்த செல்வராஜ் மகன் சதீஷ்குமார் (36), அதே கிராமத்தைச் சேர்ந்த் ராமு (33), பொன்னுசாமி மகன் ரகுநாதன் (46) ஆகயோரை பிடித்து விசாரணை நடத்தினர்.
    அப்போது, அவர்களிடம் இருந்து மான் இறைச்சியைக் வனத் துறையினர் கைப்பற்றினர். பின்னர் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து புதன்கிழமை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai