Enable Javscript for better performance
மின்சாரம் பாய்ந்து  பள்ளி மாணவர் சாவு- Dinamani

சுடச்சுட

    

    மின்சாரம் பாய்ந்ததில் பத்தாம் வகுப்பு மாணவர் புதன்கிழமை உயிரிழந்தார்.
    கோவை நீலிக்கோணாம்பாளையம் தாமோதரசாமி நாயுடு வீதியைச் சேர்ந்தவர் ராஜேஷ்கண்ணா(46). இவரது மனைவி சித்ரா(37). இவர்களுக்கு பாலாஜி என்ற மகனும் (14) ராஜேஸ்வரி என்ற மகளும் உள்ளனர்.
    இதில் பாலாஜி அதே பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் பத்தாம் வகுப்பு பயின்று வந்தார். இவர் மார்ச் 10 ஆம் தேதி தனது வீட்டின் மாடியில் அமர்ந்து படித்துக் கொண்டிருந்திருந்தார். அப்போது, அவரது சகோதரி ராஜேஸ்ரி துணி காயப்போடுவதற்காக மாடிக்கு வந்துள்ளார். அவருக்கு உதவுவதற்காக பாலாஜி துணிகளை எடுத்து அங்கிருந்த கம்பியில் காயப்போட்டுக் கொண்டிருந்தார். அப்போது, அவ்வழியே செல்லும் மின்கம்பி மீது தெரியாமல் கை பட்டுள்ளது.  இதில் மின்சாரம் பாய்ந்து பாலாஜி தூக்கி வீசப்பட்டார். இதில் படுகாயமடைந்த அவர் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 
    பின்னர் உயர் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில் புதன்கிழமை உயிரிழந்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai