Enable Javscript for better performance
விலையில்லா ஆடு வழங்கும் திட்டத்தால்  பெண்களின் வாழ்வாதாரம் உயர்வு: பொள்ளாச்சி ஜெயராமன்- Dinamani

சுடச்சுட

    

    விலையில்லா ஆடு வழங்கும் திட்டத்தால்  பெண்களின் வாழ்வாதாரம் உயர்வு: பொள்ளாச்சி ஜெயராமன்

    By DIN  |   Published on : 28th March 2019 09:32 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    விலையில்லா ஆடு வழங்கும் திட்டத்தால் கிராமப்புற ஏழை பெண்களின் வாழ்வாதாரம் உயர்ந்துள்ளது என சட்டப்பேரவை துணைத் தலைவர் பொள்ளாச்சி வி.ஜெயராமன் தெரிவித்தார்.
     பொள்ளாச்சி மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் சி.மகேந்திரனை ஆதரித்து பொள்ளாச்சி மேற்கு ஒன்றிய பகுதிகளில் சட்டப்பேரவை துணைத் தலைவர் பொள்ளாச்சி வி.ஜெயராமன் புதன்கிழமை பிரசாரம் செய்தபோது பேசியதாவது:
     சிறப்பாக செயலாற்றியதற்காக அதிமுக வேட்பாளர் சி.மகேந்திரனுக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இவர் பொள்ளாச்சி மக்களவைத் தொகுதிக்கு பல கோடி மதிப்பில் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் செய்துள்ளார்.
     தென்னை விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று கொப்பரை விலையை ரூ.95.21 ஆக உயர்த்தியுள்ளார். எனவே அவரை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும். விலையில்லா ஆடு வழங்கும் திட்டத்தால் கிராமப்புற ஏழை பெண்களின் வாழ்வாதாரம் உயர்ந்துள்ளது என்றார்.
     அப்போது, முன்னாள் அமைச்சர் செ.தாமோதரன், மேற்கு ஒன்றியச் செயலாளர் ஆர்.ஏ.சக்திவேல், தமாகா மாவட்டச் செயலாளர் குணசேகரன், அதிமுக நிர்வாகி பொன்னுச்சாமி, பாஜக நிர்வாகி ரகுபதி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai