Enable Javscript for better performance
வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் 5 ஆவது நாளாக தீ அணைக்கும் பணி- Dinamani

சுடச்சுட

    

    வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் 5 ஆவது நாளாக தீ அணைக்கும் பணி

    By DIN  |   Published on : 28th March 2019 09:36 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கோவை மாநகராட்சிக்கு உள்பட்ட வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் 5 ஆவது நாளாக புதன்கிழமையும் தீயை அணைக்கும் பணிகள் நடைபெற்றன. 
    வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் சனிக்கிழமை இரவு திடீரென தீப் பிடித்தது. மாநகராட்சி ஆணையாளர் ஷ்ரவண் குமார் ஜடாவத் உத்தரவின்பேரில் மாநகராட்சி ஊழியர்கள், தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். தண்ணீர் பீச்சி தீ பரவாமல் தடுக்கப்பட்டாலும், முழுமையாகத் தீயை அணைக்க முடியவில்லை.
    இதனால், சூலூர் விமானப் படைக்குச் சொந்தமான ஹெலிகாப்டர் உதவியுடன் குறிச்சி, சிங்காநல்லூர் குளங்களில் இருந்து திங்கள்கிழமை தண்ணீர் எடுக்கப்பட்டு தீயை அணைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
     இதில், குப்பைக் கிடங்கின் மேற்பரப்பில் பற்றி எரிந்த தீ அணைக்கப்பட்டது. ஆனாலும், குப்பைக் குவியல்களுக்கு கீழ் மக்காத குப்பைகளில் பிடித்த தீயை அணைப்பதில் சிக்கல் ஏற்பட்டது.
    இதைத் தொடர்ந்து, செவ்வாய்க்கிழமை குப்பைகளை குவியல்களாகப் பிரித்து அதன் இடையே குறுக்கு வெட்டாக வழி அமைக்கும் பணி நடைபெற்றது. அதன் பிறகு புதன்கிழமை 30 தீயணைப்பு வாகனங்கள், 20 தண்ணீர் லாரிகள் மூலமாக தீயை அணைக்கும் பணி புதன்கிழமை நடைபெற்றது. 
    இதில் தீயணைப்புத் துறையினர், மாநகராட்சி ஊழியர்கள் உள்பட 250 பேர் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai