Enable Javscript for better performance
வேளாண் பல்கலை.யில் ஏப்ரல் 5இல் கல்வி அறிமுக நாள் விழா- Dinamani

சுடச்சுட

    

    கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் வேளாண்மைக் கல்வி அறிமுக நாள் விழா ஏப்ரல் 5 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது.
    அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் இந்த நிகழ்ச்சியில், வேளாண்மை, அதைச் சார்ந்த உயர் கல்விப் படிப்புகளில் எந்தெந்த வகையான படிப்புகள் உள்ளன, அதற்கான வாய்ப்புகள் குறித்து பிளஸ் 2 முடித்த மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளது.
    பல்கலைக்கழகம், வேளாண் கல்லூரிகளில் உள்ள வசதிகள், வேளாண் படிப்புகளில் சேருவதற்காக விண்ணப்பிக்கும் முறை, பட்டப் படிப்புகளின் சிறப்புகள் போன்றவை குறித்து பேராசிரியர்களை நேரில் சந்தித்து மாணவ, மாணவிகள் தெரிந்து கொள்ளலாம்.  வேளாண்மைப் படிப்புகளில் ஆர்வம் உள்ளவர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai