அரசுப் பள்ளிகளில் பயிலும் 9 ஆம் வகுப்பு: மாணவர்களுக்கு இன்று திறனறிவுத் தேர்வு
By DIN | Published On : 28th March 2019 09:34 AM | Last Updated : 28th March 2019 09:34 AM | அ+அ அ- |

கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து நகராட்சி, மாநகராட்சி, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் 9 ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவருக்கும் தமிழ் மற்றும் ஆங்கில வழியில் திறனறிவுத் தேர்வு வியாழக்கிழமை நடைபெறுகிறது.
இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
மாணவர்கள் பாடத் திட்டத்தைத் தாண்டி மாணவர்களின் பண்பாற்றலைக் கண்டறியவே திறனறிவுத் தேர்வு நடத்துவதன் நோக்கம் ஆகும். இத்தேர்வின் மூலம் மாணவர்களின் ஆர்வம், பொது அறிவு மற்றும் எந்தத் துறையில் மாணவர்களுக்கு ஆர்வம் மேலோங்கி உள்ளது என்பதைக் கண்டறிந்து அவர்களுக்கு ஆலோசனையும், பயிற்சியும் அளிக்கப்படும்.
இந்தத் தேர்வு வியாழக்கிழமை பிற்பகல் 2 மணி முதல் 3.30 மணி வரையில் அந்தந்தப் பள்ளிகளில் நடைபெறுகிறது. இதற்கான கேள்வித்தாள் மின்னஞ்சல் மூலமாக பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...