தோட்டத் தொழிலாளர் பிரதிநிதிகள் தேர்தலில் அதிமுக வெற்றி
By DIN | Published On : 06th May 2019 03:17 AM | Last Updated : 06th May 2019 03:17 AM | அ+அ அ- |

வால்பாறை தோட்டத் தொழிலாளர் பிரதிநிதிகள் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டவர்கள் வெற்றி பெற்றனர்.
வால்பாறையை அடுத்த ஷேக்கல்முடி எஸ்டேட்டில் தொழிலாளர் பிரதிநிதிக்கான தேர்தல் அண்மையில் நடைபெற்றது. இதில் பல்வேறு கட்சிகளின் தொழிற்சங்கத்தை சேர்ந்தவர்கள் போட்டியிட்டனர். இதில் அதிமுக சார்பில் போட்டியிட்ட அபுபக்கர் (மேல் டிவிஷன்), மூக்கம்மாள் (புதுக்காடு டிவிஷன்), செல்வம் ( கீழ் டிவிஷன்), தேவி (லோயர் டிவிஷன்) ஆகிய நான்கு பேர் வெற்றி பெற்றனர்.
அதிமுக தொழிற்சங்க அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் வெற்றி பெற்றவர்கள் அதிமுக தொழிற்சங்கத் தலைவர் வால்பாறை அமீதுக்கு சால்வை அணிவித்து வாழ்த்துப் பெற்றனர். அப்போது கட்சியின் நகர இணைச் செயலாளர் பொன்கணேஷ், மாவட்ட பாசறை இணைச் செயலாளர் சலாவுதீன் உள்பட திரளானோர் உடனிருந்தனர்.