முகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் கோயம்புத்தூர்
வால்பாறையில் விழும் நிலையில் உள்ள மரங்களை அப்புறப்படுத்த கோரிக்கை
By DIN | Published On : 15th May 2019 07:16 AM | Last Updated : 15th May 2019 07:16 AM | அ+அ அ- |

வால்பாறையில் பொதுமக்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் கீழே விழும் நிலையில் உள்ள மரங்களை அப்புறப்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என காமராஜ் அறக்கட்டளை கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து அந்த அறக்கட்டளையின் துணைத் தலைவர் பொன்னான் மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பியுள்ள மனு விவரம்:
வால்பாறையில் பல்வேறு இடங்களில் ஆபத்தான நிலையில் கீழே விழும் வகையில் பெரிய மரங்கள் உள்ளன. பழைய பேருந்து நிலையம் முன்பு இதுபோன்று ஏராளமான மரங்கள் உள்ளன. எனவே, இதுபோன்ற மரங்களை கண்டறிந்து அகற்ற வேண்டும்.
இதேபோல, காமராஜ் நகரில் அமைந்துள்ள மயானத்தில் ஏராளமான மரங்கள் விழும் நிலையில் உள்ளன. உடல் தகனம் செய்ய வருபவர்களுக்கு ஆபத்தாக இருக்கும் மரங்களை அப்புறப்படுத்துவதோடு, முள்புதர்களையும் அகற்ற வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.