கூழாங்கல் ஆற்றுக்கு செல்ல தடை நீடிப்பு: சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம்
By DIN | Published On : 15th May 2019 07:25 AM | Last Updated : 15th May 2019 07:25 AM | அ+அ அ- |

கூழாங்கல் ஆற்றுக்குச் செல்ல விதிக்கப்பட்ட தடை நீடிப்பதால் வால்பாறைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்புகின்றனர்.
கோடை விடுமுறை என்பதால் வால்பாறை பகுதிக்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். கூழாங்கல் ஆறு, நல்லமுடி காட்சிமுனை, வெள்ளமலை சுரங்கம், நீரார் அணை, சோலையாறு அணை என குறிப்பிட்ட சுற்றுலாத் தளங்கள் இங்கு உளளன. இதில் கூழாங்கல் ஆற்றில் எப்போதும் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அதிக அளவில் காணப்படும்.
இந்நிலையில் கடந்த 5ஆம் தேதி முதல் அப்பகுதிக்குச் செல்ல போலீஸார் தடை விதித்திருப்பதோடு அங்கு ஊர்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நீண்ட நேரம் பொழுதைப் போக்க உகந்த இடமாக விளங்கிய கூழாங்கல் ஆற்றுக்கு செல்ல தடை விதித்திருப்பதால் வால்பாறைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளை ஏமாற்றம்
அடைந்துள்ளனர்.