Enable Javscript for better performance
புதிய சொத்து வரி வசூலிப்பா? மாநகராட்சி நிர்வாகம் மறுப்பு- Dinamani

சுடச்சுட

    

    புதிய சொத்து வரி வசூலிப்பா? மாநகராட்சி நிர்வாகம் மறுப்பு

    By DIN  |   Published on : 16th May 2019 08:14 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கோவை மாநகராட்சியில் 100 சதவீதம் வரி உயர்த்தப்பட்டதாக எழுந்த புகாருக்கு  சொத்து வரி பொதுச் சீராய்வு ஏதும் அமல்படுத்தவில்லை என மாநகராட்சி நிர்வாகம் மறுப்பு தெரிவித்துள்ளது. 
    கோவை மாநகராட்சியில் 2018 ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் புதிய வரி விதிப்பு அமல்படுத்தப்பட உள்ளதாக அரசு தரப்பில் 2017 டிசம்பர் மாதம் ஆணை பிறப்பிக்கப்பட்டது. இந்த உத்தரவை எதிர்த்து மக்கள் போராட்டம் நடத்தியதைத் தொடர்ந்து, பழைய வரியே வசூலிக்கப்பட்டது. 
    இந்நிலையில், கோவை மாநகராட்சியில் திங்கள்கிழமை முதல் 2018-ஆம் ஆண்டு ஏப்ரல் 1-ஆம் தேதியிட்டு  குடியிருப்புகளுக்கு 50 சசவீதம், குடியிருப்பு அல்லாத இனங்களுக்கு 100 சதவீதம் சொத்து வரி உயர்வை அமல்படுத்தி புதிய வரி வசூலிப்பதாகப் புகார் எழுந்தது.  ஆனால், கோவை மாநகராட்சியில் சொத்து வரி பொதுச் சீராய்வு எதுவும் அமல்படுத்தப்பட வில்லை என மாநகராட்சி நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai