ஆண்களுக்கான கருத்தடை சிகிச்சை முகாம்
By DIN | Published On : 16th May 2019 08:14 AM | Last Updated : 16th May 2019 08:14 AM | அ+அ அ- |

கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஆண்களுக்கான நவீன கருத்தடை சிகிச்சை முகாம் வியாழக்கிழமை (மே 16) நடைபெறுகிறது.
இதுகுறித்து அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை நிர்வாகம் சார்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
கோவை மாவட்ட குடும்ப நலத் துறை மற்றும் பொது சுகாதாரத் துறை சார்பில் ஆண்களுக்கான நவீன கருத்தடை சிகிச்சை முகாம், கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் வியாழக்கிழமை நடைபெறுகிறது.
இச்சிகிச்சை பயிற்சி பெற்ற மருத்துவர்களால் இலவசமாக மேற்கொள்ளப்படுகிறது. இதனால் எந்தவித பக்கவிளைவுகளும் ஏற்படாது. மேலும் இல்லற வாழ்க்கையிலும், அன்றாட வேலையிலும் எவ்வித பாதிப்புகளுக்கும் வாய்ப்பில்லை. இதற்காக மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற வேண்டிய அவசியமும் இல்லை. சிகிச்சை பெற்றுக்கொள்ளும் ஆண்களுக்கு ஊக்கத் தொகையாக ரூ.1,100 அரசு வழங்குகிறது. சிகிச்சை பெற்றுக்கொள்ள விரும்பும் ஆண்கள் 94865 18870, 98652 89293 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.