Enable Javscript for better performance
பொள்ளாச்சியில் 3 வீடுகளில் 40 பவுன் திருட்டு- Dinamani

சுடச்சுட

    

    பொள்ளாச்சியில் 3 வீடுகளில் பூட்டை உடைத்து 40 பவுன் மற்றும் ரூ.1.50 லட்சத்தை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர்.
    பொள்ளாச்சியை அடுத்த ஆவல்சின்னாம்பாளையம் மாகாளியம்மன் கோயில் வீதியைச் சேர்ந்தவர் குணசேகரன் (50), தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி ரத்தினம் (45). இவர்களுக்கு ஒருமகள் உள்ளார்.  இவர்கள் மூவரும் வியாழக்கிழமை காலை வெளியே சென்றிருந்தனர். மதியம் வந்துபார்த்தபோது வீட்டின் கதவு திறந்து இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உள்ளே சென்று பார்த்தபோது,  பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 15 பவுன் நகை மற்றும் ரூ.20 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. 
    இதுகுறித்து கோட்டூர் போலீஸார் விசாரனை நடத்தி வருகின்றனர்.      
    பொள்ளாச்சி, சூளேஸ்வரன்பட்டி பொன்முத்து நகரில் வசித்து வருபவர் நாச்சிமுத்து (60), விவசாயி. இவரது மனைவி தனலட்சுமி (55). இருவரும் வியாழக்கிழமை காலை தோட்டத்துக்குச் சென்று விட்டு மதியம் வீட்டுக்கு திரும்பியுள்ளனர். அப்போது வீட்டின் கதவை  உடைத்து பீரோவில் வைத்திருந்த 23 பவுன் நகை மற்றும் ரூ. 1 லட்சத்தை மர்மநபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.  
    சூளேஸ்வரன்பட்டி வஉசி வீதியில் வசித்து வருபவர்  முத்துகுமார் (46), இவர் குடும்பத்துடன் அம்பராம்பாளையம் ஆற்றுக்கு வியாழக்கிழமை காலை குளிக்கச் சென்றுள்ளார். வீட்டுக்கு திரும்பி வந்து பார்த்தபோது பீரோவில் வைத்திருந்த இரண்டரை பவுன் நகை மற்றும் ரூ. 30 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலைய போலீஸார் விசாரித்து வருகின்றனர். 
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai