பாரம் சுமக்கும் பொது தொழிலாளர் சங்க நிர்வாகிகள் தேர்வு

கோவை மாவட்ட டிரான்ஸ்போர்ட் லாரி பாரம் சுமக்கும் பொது தொழிலாளர் சங்கத்துக்கு புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

கோவை மாவட்ட டிரான்ஸ்போர்ட் லாரி பாரம் சுமக்கும் பொது தொழிலாளர் சங்கத்துக்கு புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
கோவை மாவட்ட டிரான்ஸ்போர்ட் லாரி பாரம் சுமக்கும் பொது தொழிலாளர் சங்கத்தில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் உள்ளனர். 
இந்த சங்கத்தின் மகாசபைக் கூட்டம் ஆர்.எஸ்.புரத்தில் புதன்கிழமை நடைபெற்றது. தேர்தல் தலைவர்களாக சி.ஆர்.நாராயணசாமி, லாலி ரோடு செல்வம் ஆகியோர் செயல்பட்டனர். 
இதில், சங்கத்தின் புதிய தலைவராக பி.சுப்பிரமணி, செயலராக பி.ஏ.காளிமுத்து, பொருளாளராக சி.கே.கருப்புசாமி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். 
இதில்,  நிர்வாகிகள் ஆர்.வெள்ளிங்கிரி, எஸ்.ஆர்.பழனிசாமி, எம்.சுந்தரம், பி.வி.செல்வராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com