முகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் கோயம்புத்தூர்
காலபைரவர் கோயில் கும்பாபிஷே விழா
By DIN | Published On : 18th May 2019 06:33 AM | Last Updated : 18th May 2019 06:33 AM | அ+அ அ- |

பெரியநாயக்கன்பாளையத்தை அடுத்த கவுண்டம்பாளையத்தில் உள்ள வாராஹி மந்தராலயத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள கால பைரவர் மற்றும் அஷ்ட பைரவர் கோவில் கும்பாபிஷேக விழா வியாழக்கிழமை நடந்தது.
கும்பாபிஷே நிகழ்ச்சிகள் விக்னேஸ்வரபூஜையுடன் புதன்கிழமை தொடங்கியது. தொடர்ந்து யந்திரஸ்தாபனம், அஷ்டபந்தனம், சிலை பிரதிஷ்டை ஆகியன நடந்தன. முக்கிய நிகழ்ச்சியான கும்பாபிஷேம் வியாழக்கிழமை காலை 6 மணிக்குத் தொடங்கியது.
ஸ்ரீ வாராஹி மந்தராலய பீடாதிபதி ஸ்ரீ வாரஹி மணிகண்ட சுவாமிகள் விழாவுக்கு தலைமை வகித்து கோபுர கலசத்துக்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தார். தொடர்ந்து மூலஸ்தானத்தில் உள்ளஸ்ரீ கால பைரவருக்கும், அஷ்ட பைரவருக்கும் கலச தீர்த்தாபிஷேகங்கள் நடந்தன. விழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.