Enable Javscript for better performance
காலம் கடந்து விண்ணப்பித்த தனியார் கல்லூரிக்கு புதிய பாடப்பிரிவு தொடங்க அனுமதி: பல்கலைக்கழக ஆசிரியர்- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    முகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் கோயம்புத்தூர்

    காலம் கடந்து விண்ணப்பித்த தனியார் கல்லூரிக்கு புதிய பாடப்பிரிவு தொடங்க அனுமதி: பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் கண்டனம்

    By DIN  |   Published On : 18th May 2019 06:31 AM  |   Last Updated : 18th May 2019 06:31 AM  |  அ+அ அ-  |  

    கோவையில் புதிய பாடப் பிரிவு தொடங்குவதற்கு காலம் கடந்து விண்ணப்பித்த தனியார் கல்லூரிக்கு உயர்கல்வித் துறை முதன்மைச் செயலர் அனுமதி வழங்கியிருப்பதற்கு பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.
    கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தின் ஆட்சி மன்றக் குழுக் கூட்டம் உயர்கல்வித் துறை முதன்மைச் செயலர் மங்கத் ராம் சர்மா தலைமையில் பல்கலைக்கழக வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த கூட்டத்தில், கோவையில் உள்ள மூன்று தனியார் கலை, அறிவியல் கல்லூரிகளில் வரும் கல்வியாண்டு முதல் புதிய பாடப் பிரிவு தொடங்க அனுமதி அளிப்பது குறித்து விவாதிக்கப்பட்டது. உரிய காலத்தில் விண்ணப்பிக்காததால் இந்த விண்ணப்பங்களை ஏற்கக் கூடாது என்று சிண்டிகேட் உறுப்பினர்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். இருப்பினும் முதன்மைச் செயலர் தனது சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி ஒரு கல்லூரிக்கு அனுமதி வழங்கியதாகக் கூறப்படுகிறது.
     இந்த நிலையில், அரசு செயலரின் நடவடிக்கைக்கு பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சங்கத்தின் மாநிலத் தலைவர் என்.பசுபதி கூறியதாவது:
    பல்கலைக்கழகங்களின் கீழ் செயல்படும் தனியார் கலை, அறிவியல் கல்லூரிகள் புதிய பாடப் பிரிவுகளைத் தொடங்குவதாக இருந்தால் அந்த ஆண்டின் அக்டோபர் மாதத்துக்குள் விண்ணப்பிக்க வேண்டும். துணைவேந்தரின் அனுமதியைப் பெற்று டிசம்பரில் கூட விண்ணப்பிக்கலாம்.
     இதைத் தொடர்ந்து புதிய பாடப் பிரிவை நடத்துவதற்கான கட்டமைப்பு வசதிகள், அடிப்படை வசதிகள், தேவையான ஆசிரியர், பணியாளர்கள் அந்த கல்லூரியில் இருக்கின்றனரா என்பதை ஆய்வு செய்வதற்கு ஒரு குழு அமைக்கப்படும். அந்தக் குழு ஆய்வு செய்து சமர்ப்பிக்கும் அறிக்கையின் அடிப்படையிலேயே பல்கலைக்கழக சிண்டிகேட்டில் அனுமதி வழங்கப்படும்.  ஆனால் கோவையில் செயல்பட்டு வரும் ஒரு மகளிர் கல்லூரி உள்ளிட்ட மூன்று தனியார் கலை, அறிவியல் கல்லூரிகள், வரும் கல்வியாண்டில் புதிய பாடப் பிரிவுகளைத் தொடங்குவதற்கு அனுமதி கேட்டு கடந்த ஏப்ரல் மாதத்தில் விண்ணப்பித்துள்ளனர். இது தொடர்பாக சிண்டிகேட்டில் விவாதம் நடைபெற்றபோது, உரிய காலத்தில் விண்ணப்பிக்காத கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கக் கூடாது என்று உறுப்பினர்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். இதையடுத்து மகளிர் கல்லூரி உள்ளிட்ட 2 கல்லூரிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. அதேநேரம், ஒரு தனியார் கலை, அறிவியல் கல்லூரியில் மட்டும் "லாஜிஸ்டிக்ஸ்' என்ற புதிய படிப்பை நடத்துவதற்கு தனது சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி அனுமதி அளிப்பதாக உயர்கல்வித் துறை முதன்மைச் செயலர் கூறியுள்ளார்.
     இதை ஒரு மோசமான முன்னுதாரணமாக பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் கருதுகிறது. உயர்கல்வித் துறை முதன்மைச் செயலருக்கு அதுபோன்ற சிறப்பு அதிகாரங்கள் எதுவும் கிடையாது. மூன்று கல்லூரிகளும் காலம் தாழ்த்தி விண்ணப்பித்துள்ள நிலையில் ஒரு கல்லூரிக்கு மட்டும் அரசு அனுமதி வழங்குவதால், அரசுக்கும் அந்தக் கல்லூரிக்கும் தனிப்பட்ட முறையில் தொடர்பு இருப்பதாக அனைவரும் கருதுவதற்கு வாய்ப்புகள் உள்ளன. எனவே, செயலரின் இந்த முடிவுக்கு கண்டனம் தெரிவிப்பதுடன், அந்த உத்தரவையும் திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். உத்தரவைத் திரும்பப் பெறாவிட்டால் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று அவர் தெரிவித்துள்ளார்.


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp