முகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் கோயம்புத்தூர்
மேட்டுப்பாளையத்தில் சூறாவளி காற்றுடன் கனமழை
By DIN | Published On : 18th May 2019 06:28 AM | Last Updated : 18th May 2019 06:28 AM | அ+அ அ- |

மேட்டுப்பாளையம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை சூறாவளி காற்றுடன் கனமழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
மேட்டுப்பாளையம், சிறுமுகை, காரமடை உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமப் பகுதிகளில் கடந்த மூன்று மாதங்களாக கடும் வெயில் வாட்டியது. இதையடுத்து தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டு விவசாயம் முற்றிலும் பாதிக்கப்பட்டது. பெரும்பாலான இடங்களில் குடிநீர் கிடைக்காத நிலை ஏற்பட்டது.
வனப் பகுதியை ஒட்டியுள்ள நீரோடைகள் முற்றிலும் வறண்டு போனதால் வனவிலங்குகள் விவசாய நிலங்களுக்குள் நுழைந்து சேதப்படுத்தின.
கடந்த ஒருவாரமாக விட்டுவிட்டு பரவலான மழை பெய்து வந்த நிலையில் வெள்ளிக்கிழமை மாலை 4 மணிக்கு சூறாவளி காற்றுடன் மழை பெய்தது. இதனால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.