காரமடை அரசுக் கல்லூரியில் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு
By DIN | Published On : 23rd May 2019 08:08 AM | Last Updated : 23rd May 2019 08:08 AM | அ+அ அ- |

மேட்டுப்பாளையம் அருகேயுள்ள காரமடை கலை, அறிவியல் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நடைபெற்றது. இதில் 300க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு சேர்க்கை ஆணை வழங்கப்பட்டது.
மேட்டுப்பாளையம் அருகே காரமடை அரசு கலை, அறிவியல் கல்லூரியில் 2019-20 கல்வி ஆண்டில் 420 மாணவ, மாணவியருக்கான காலியிடங்கள் இருந்தன.
இதற்கான கலந்தாய்வு மற்றும் சேர்க்கை கடந்த செவ்வாய், புதன்கிழமைகளில் நடைபெற்றது.
முதல் நாளில் மாற்றுத்திறனாளிகள், விளையாட்டு வீரர்கள், ஓய்வு பெற்ற ராணுவ வீரர்களின் குழந்தைகள், அந்தமான் நிக்கோபார் தீவில் வசித்து வந்த மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர். தொடர்ந்து இரண்டாவது நாளான பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு புதன்கிழமை நடைபெற்றது.
இதில் பிஏ பொருளியல், பிஏ சுற்றுலா மேலாண்மை, பி காம், பிகாம் சிஏ, பி எஸ்சி கணிதவியல் ஆகிய பாடங்களுக்கு கலந்தாய்வு நடைபெற்றது.
இதில் 700க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதில் 300க்கு மேற்பட்ட மாணவர்களுக்கு சேர்க்கை ஆணை வழங்கப்பட்டது.
மீதம் உள்ள இடங்களுக்கு ஜூன் 3ஆம் தேதி 2 ஆம் கட்ட கலந்தாய்வு நடைபெற இருக்கிறது. இத்தகவலை கல்லூரி முதல்வர் சொர்ணலதா ஜோசப் தெரிவித்தார்.