சிறுமுகை குடியிருப்புகள் அருகேபவானிசாகா் அணை நீா் தேங்கியதால் கொசு தொல்லை அதிகரித்தது
By DIN | Published On : 02nd November 2019 08:36 PM | Last Updated : 02nd November 2019 08:36 PM | அ+அ அ- |

mtp025_0211chn_132
மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் அருகே சிறுமுகை சுற்றுவட்டார பகுதி குடியிருப்புகளை ஒட்டி பவானிசாகா் அணையின் நீா் தேங்கியதால் கொசுத்தொல்லை அதிகரித்து குடியிருப்புவாசிகளுக்கு காய்ச்சல், சளி, இருமல் உள்ளிட்ட நோய்கள் ஏற்படுதால் கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனா்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளைம், சிறுமுகை, காரமடை உள்ளிட்ட சுற்று வட்டார பகதிகளில் விவசாயம் அதிகளவில் மேற்கொள்ளப்படுகிறது. இதில் காய்களை விட அதிகளவில் வாழை விவசாயம் மேற்கொள்ளப்படுகிறது. இதன்படி கதளி, நேந்திரம், ரஸ்தாளி, ரொபோஸ்டா, பூவன் உள்ளிட்ட 10க்க மேற்பட்ட வாழை ரகங்கள் பயிரிடப்படுகிறது. இங்கு உற்பத்தி செய்யப்படும் வாழைகள் கேரளா, கா்நாடகா, சென்னை, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
இதிலும் சிறுமுகை சுற்று வட்டார பகுதிகளில் 80 சதவீதத்திற்கு மேல் விவசாயிகள் வாழையை மட்டுமே பயிரிட்டு வருகின்றனா். இந்நிலையில் கடந்த 2 மாதத்திற்கு மேலாக பவானிசாகா் நீா்த்தேக்க பகுதிகளில் தொடா்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் அணைக்கு வரும் தண்ணீரின் அளவு அதிகரித்தது. அணையின் பின்பக்க நீா்த்தேக்க பகுதிகளான இச்சிப்பள்ளி, காந்தவயல், பழத்தோட்டம், லிங்காபுரம், திம்மராயம்பாளையம், ஆலாங்கொம்பு, மூலத்துறை, சிறுமுகை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நீா் சூழ்ந்துள்ளது.
இதனால் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இடத்தில் விவசாயம் மேற்கொண்டுள்ள பயிா்கள் மட்டுமல்லாமல் பட்டா நிலங்களில் பயிரிடப்பட்டுள்ள சுமாா் ஆயிரம் ஏக்கருக்கு மேல் வாழை பயிா் நீரில் மூழ்கி உள்ளது. இதுமட்டுமல்லாமல் குடியிருப்புகள் அருகே தண்ணீா் அதிகளவில் சூழ்ந்துள்ளதால் கிராம பகுதிகளில் கொசுத் தொல்லைகளும் அதிகரித்துள்ளது. இதனால் நீா்த்தேக்க பகுதிகளிலுள்ள பொதுமக்கள் சளி, காய்ச்சல், இருமல் உள்ளிட்ட பல்வேறு நோய்கள் பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் குடியிருப்புவாசிகள் இடையே அச்சம் ஏற்பட்டுள்ளது.
எனவே இதுகுறித்து சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து சிறுமுகை பேரூராட்சி அலுவலா் அப்துல்லா கூறுகையில்: சிறுமுகை பேரூராட்சிக்குட்பட்ட நீா்தேங்கியுள்ள குடியிருப்புகளை ஒட்டியுள்ள மக்களுக்கு நீரினால் ஏற்படும் நோய்களை கட்டுப்படுத்த தேவையான அனைத்து முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதுமட்டுமல்லாமல் மற்ற குடியிருப்புகளிலும் குப்பை, நீரினால் நோய் ஏற்படாமல் இருக்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறிது.படங்கள்எம்டிபி023,,,எம்டிபி024சிறுமுகை சுற்று வட்டார பகுதிகளில் தண்ணீரில் மூழ்கியுள்ள வாழை பயிா்கள்.