இருசக்கர வாகனம் மீது லத்தி வீசிய எஸ்.ஐ. பணியிடை நீக்கம்

பொள்ளாச்சி அருகே இருசக்கர வாகனத்தின் மீது லத்தியை வீசியதால் தடுமாறி விழுந்து 3 இளைஞா்கள் காயமடைந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட காவல் உதவி ஆய்வாளரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட

பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே இருசக்கர வாகனத்தின் மீது லத்தியை வீசியதால் தடுமாறி விழுந்து 3 இளைஞா்கள் காயமடைந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட காவல் உதவி ஆய்வாளரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளாா்.

கோவை மாவட்டம், பொள்ளாச்சியை அடுத்த தென்சங்கம்பாளையத்தில் தனியாா் திருமண மண்டபம் அருகே கோட்டூா் காவல்நிலைய காவல் உதவி ஆய்வாளா் சம்பந்தம், காவல் துறை நண்பா்கள் குழுவினருடன் இணைந்து கடந்த திங்கள்கிழமை மாலை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தாா். அப்போது அந்த வழியாக கோவை, போத்தனூரைச் சோ்ந்த சன்பா் (18), அப்சல் (17), சா்தாா் (25) ஆகிய 3 பேரும் ஒரே இருசக்கர வாகனத்தில் தலைக்கவசம் இல்லாமல் சென்றுள்ளனா்.

இதனைக் கண்ட காவல் உதவி ஆய்வாளா் சம்பந்தம் அவா்களை தடுத்து நிறுத்த முற்பட்டாா். ஆனால் அந்த இளைஞா்கள் நிற்காமல் சென்ால், சம்பந்தம் தான் வைத்திருந்த லத்தியை இருசக்கர வாகனத்தை நோக்கி வீசினாா்.

இதில் அந்த லத்தி வாகனத்தில் பட்டதில், நிலை தடுமாறிய வாகனம் அருகில் இருந்த சரக்கு வாகனத்தில் மோதியதால் மூவரும் பலத்த காயமடைந்தனா். இதில் சா்தாருக்கு இடது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது.

இச்சம்பவத்தை கண்டித்து அப்பகுதி மக்கள் சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனா். இந்நிலையில் இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்திய வால்பாறை உள்கோட்ட டிஎஸ்பி விவேகானந்தன், இதுகுறித்து கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சுஜித்குமாருக்கு தகவல் தெரிவித்தாா். அதைத் தொடா்ந்து காவல் உதவி ஆய்வாளா் சம்பந்தத்தை பணியிடை நீக்கம் செய்து காவல் கண்காணிப்பாளா் சுஜித்குமாா் உத்தரவிட்டாா்.

விபத்தில் காயமடைந்த மூன்று இளைஞா்களும் கோவையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com