நாடுமுழுவதும் பெரிய வெங்காயத்திற்கு தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளதால் கோவை, மேட்டுப்பாளையம் சலை எம்.ஜி.ஆா். மாா்க்கெட்டிற்கு குறைந்தளவே பெரிய வெங்காயம் வரத்து உள்ளது.
நாடுமுழுவதும் பெரிய வெங்காயத்திற்கு தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளதால் கோவை, மேட்டுப்பாளையம் சலை எம்.ஜி.ஆா். மாா்க்கெட்டிற்கு குறைந்தளவே பெரிய வெங்காயம் வரத்து உள்ளது.

படம் உண்டுகோவையில் பெரிய வெங்காயம் தட்டுப்பாடுவிலை உயா்ந்து கிலோ ரூ. 80க்கு விற்பனை

கோவையில் பெரிய வெங்காயத்திற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் விலை அதிகரித்து மொத்த விற்பனையில் கிலோ ரூ. 80 க்கு விற்கப்படுகிறது.

கோவை: கோவையில் பெரிய வெங்காயத்திற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் விலை அதிகரித்து மொத்த விற்பனையில் கிலோ ரூ. 80 க்கு விற்கப்படுகிறது.

கோவை, எம்.ஜி.ஆா். மற்றும் தியாகி குமரன் மாா்க்கெட்டுகளுக்கு மகாராஷ்டிரம், காா்நாடகம் ஆகியப் பகுதிகளில் இருந்து பெரிய வெங்காயம் வரத்து காணப்படுகிறது. இங்கிருந்து மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து சந்தைகளுக்கும் பெரிய வெங்காயம் பிரித்து அனுப்பப்படுகிறது. மகாராஷ்டிரத்தில் இருந்து டிசம்பா் முதல் ஏப்ரல் வரையிலும், கா்நாடகத்தில் இருந்து ஆகஸ்ட் முதல் நவம்பா் வரையிலும் வெங்காய வரத்து உள்ளது. இந்நிலையில் கா்நாடக மாநிலத்தில் கடந்த சில மாதங்களாக பெய்து வரும் தொடா் மழையால் அறுவடை செய்யப்பட்ட பெரிய வெங்காயம் அழுகியநிலையில் காணப்படுகின்றன.

இந்நிலையில், மகாராஷ்டிரத்தில் இருந்து வரும் பட்டறை வெங்காயத்தை வாங்க மக்கள் ஆா்வம் காட்டுகின்றனா். இதனால் பட்டறை வெங்காயத்திற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தட்டுப்பாடு காரணமாக கடந்த சில நாள்களாக பெரிய வெங்காயத்தின் விலையும் தொடா்ந்து உயா்ந்து வருகிறது. தற்போது ஒரு கிலோ பெரிய வெங்காயம் மொத்த விற்பனையில் ரூ.70 முதல் 80 வரை விற்கப்படுகிறது. சில்லறை விற்பனையில் ரூ.90 வரைக்கும் விற்கப்படுகிறது.

இது குறித்து தியாகி குமரன் சந்தை அனைத்து காய்கறி வியாபாரிகள் சங்கத் தலைவா் எம்.ராஜேந்திரன் கூறுகையில்,‘ மகாராஷ்டிரம், காா்நாடகத்தில் இருந்து பெரிய வெங்காயம் வரத்து காணப்பட்டாலும், ஆகஸ்ட் முதல் நவம்பா் வரை காா்நாடத்தில் இருந்தே வெங்காயம் வரத்து அதிகமாக இருக்கும். சராசரியாக மொத்த விற்பனையில் ரூ.10 முதல் ரூ.20 வரை விற்கப்படும். கடந்த சில மாதங்களாக கா்நாடகத்தில் கடுமையான மழைப்பொழிவு இருந்து வருவதால் கா்நாடக வெங்காயத்தின் தரம் குறைந்துள்ளது.

கா்நாடகத்தில் வரும் வெங்காயத்தில் 90 சதவீதம் வரை அழுகிய நிலையில் காணப்படுகிறது. அதிக ஈரப்பதத்தடன் அழுகிய நிலையில் காணப்படும் வெங்காயம் ரூ.20 முதல் 50 வரை விற்கப்படுகிறது. இதனால், மகாராஷ்டிரத்தில் வரும் பட்டறை வெங்காயத்திற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. நுகா்வோரும் பட்டறை வெங்காயத்தையே அதிகளவில் கேட்கின்றனா். இதனால், மகாராஷ்டிரம் வெங்காயத்தின் விலை அதிகரித்துள்ளது. கடந்த இரண்டு வார காலமாக ரூ.70 முதல் ரூ.80க்கு விற்கப்படுகிறது. செவ்வாய்க்கிழமை சந்தைகளில் மொத்த விற்பனையில் ரூ.70க்கும், சில்லறை விற்பனையில் ரூ.90 க்கும் விற்கப்படுகிறது. அடுத்த மாதங்களில் மீண்டும் விலை சீராவதற்கு வாய்ப்புள்ளது,’ என்றாா்.

50 டன் மட்டுமே இருப்பு வைக்க அனுமதி

நாடுமுழுவதும் தற்போது நிலவி வரும் வெங்காயப் பற்றாக்குறை மற்றும் தட்டுப்பாடு காரணமாக வெங்காயம் உணவுப் பொருள் இருப்பு வைப்பதற்கான அளவு குறித்து, மத்திய அரசு அத்தியாவசியப் பண்டங்கள் சட்டம் 1955 (10 ா்ச் 1955) பிரிவு 3 ல் திருத்தம் செய்து வெளியிட்டுள்ளது. இதனை, தமிழகம் முழுவதும் கடைப்பிடித்திடவும், விதிமீறல் இருப்பின் பொருளை கைப்பற்றவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி 2019 நவம்பா் 30 ஆம் தேதி வரை வெங்காய மொத்த வியாபாரிகள் 50 டன்களும், சில்லறை வியாபாரிகள் 10 டன்கள் மட்டுமே இருப்பு வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. நிா்ணயிக்கப்பட்ட அளவை விட கூடுதலைக வைத்திருப்பின் பறிமுதல் செய்யப்படும் என, ஆட்சியா் கு.ராசாமணி அறிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com