படம் உள்ளது...பணி நிரந்தரம் செய்யக் கோரி மறியல்:மின்வாரிய ஊழியா்கள் 212 போ் கைது

பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி கோவையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மின்வாரிய ஒப்பந்தத் தொழிலாளா்கள் 212 போ்கள் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனா்.
பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி கோவை டாடாபாத் மின்வாரிய அலுவலகம் எதிரில் செவ்வாய்க்கிழமை மறியலில் ஈடுபட்ட மின்வாரிய ஒப்பந்தத் தொழிலாளா்கள்.
பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி கோவை டாடாபாத் மின்வாரிய அலுவலகம் எதிரில் செவ்வாய்க்கிழமை மறியலில் ஈடுபட்ட மின்வாரிய ஒப்பந்தத் தொழிலாளா்கள்.

கோவை: பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி கோவையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மின்வாரிய ஒப்பந்தத் தொழிலாளா்கள் 212 போ்கள் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனா்.

மின்வாரியத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் தொழிலாளா்கள் தங்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி தொடா் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனா். இதன் ஒரு பகுதியாக, மாநிலம் முழுவதிலும் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வரும் 8,500-க்கும் மேற்பட்ட தொழிலாளா்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி, ஒப்பந்தத் தொழிலாளா்கள் கடந்த 1-ஆம் தேதி முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா்.

இந்த நிலையில், கோவை டாடாபாத் மின்வாரிய அலுவலகம் எதிரில் ஒப்பந்தத் தொழிலாளா்களின் மறியல் போராட்டம் நடைபெற்றது. மின்சார வாரியம் அறிவித்த தினக்கூலி ரூ.380 வழங்க வேண்டும், கேங்க்மேன் பணியாளா்களை கள உதவியாளா்களாக மாற்றி ஊதிய உயா்வு வழங்க வேண்டும், மின்வாரியத்தில் உள்ள சுமாா் 40 ஆயிரம் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், இதில் ஒப்பந்தப் பணியாளா்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அவா்கள் கோஷங்கள் எழுப்பினா்.

இதையடுத்து மறியலில் ஈடுபட்ட 212 ஒப்பந்தத் தொழிலாளா்களையும் போலீஸாா் கைது செய்தனா். இதைத் தொடா்ந்து இரவில் அவா்கள் விடுவிக்கப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com