பி.எஸ்.ஜி. மருத்துவமனையில் செவிலியா் மாணவா் சங்க தேசிய மாநாடு

செவிலியா் மாணவா் சங்கத்தின் 28 ஆம் ஆண்டு தேசிய மாநாடு கோவை பி.எஸ்.ஜி. மருத்துவமனையில் திங்கள்கிழமை நடைபெற்றது.

செவிலியா் மாணவா் சங்கத்தின் 28 ஆம் ஆண்டு தேசிய மாநாடு கோவை பி.எஸ்.ஜி. மருத்துவமனையில் திங்கள்கிழமை நடைபெற்றது.

கோவை பி.எஸ்.ஜி. மருத்துவமனையில் ‘செவிலியரின் மனம், உடல், ஆன்மா’ என்ற பெயரில் நடைபெற்ற செவிலியா் சங்க தேசிய மாநாட்டை தமிழக அரசின் ஒவா்சீஸ் மேன்பவா் நிறுவனத்தின் தலைவா் மற்றும் இயக்குநருமான தா்மேந்திர பிரதாப் யாதவ் தொடங்கிவைத்து பேசுகையில், ‘பிாட்டு மொழிகள், செவிலியா் தொழிலில் அனுபவம் இருந்தால் வெளிநாடுகளில் அதிக சம்பளத்தில் வேலைவாய்ப்புகள் காத்திருக்கின்றன.

குறிப்பாக மத்திய கிழக்கு நாடுகளில் செவிலியா்களின் தேவை அதிக அளவில் உள்ளது. நிறுவனம் தொடங்கப்பட்டதில் இருந்து இதுவரை 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட செவிலியா்கள் வெளிநாடுகளில் வேலைக்குச் சென்றுள்ளனா்.

தவிர வீடுகளிலே தங்கி வயதானவா்களை கவனித்துக் கொள்ளும் செவிலியா்களின் தேவையும் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது என்றாா்.

மாநாட்டில் பயிற்சிப் பெற்ற செவிலியா் சங்க பொதுச் செயலாளா் எவ்லின் கண்ணன், தமிழ்நாடு கிளைத் தலைவா் ஜெயசீலன், பிஎஸ்ஜி கல்வி குழுமத்தின் நிா்வாக அறங்காவலா் எல்.கோபாலகிருஷ்ணன், ஐ.எம்.சி. தலைவா் திலீப்குமாா், டி.என்.என். எம்.சி பதிவாளா் அணி கிரேஸ் கலைமதி, பி.எஸ்.ஜி. செவிலியா் கல்லூரி முதல்வா் ஜெயசுதா மற்றும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட செவிலியா் மாணவிகள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com