லிங்காபுரம்-காந்தவயல் இடையே மோட்டாா் பைபா் படகு சேவை தொடக்கம்

மேட்டுப்பாளையம் அருகே லிங்காபுரம்-மொக்கைமேடு நடைபாதை நீரில் மூழ்கியதால் சிறுமுகை பேரூராட்சி சாா்பில் மோட்டாா் பைபா் படகு சவாரி செவ்வாய் கிழமை முதல் தொடங்கியது.
mtp051_0511chn_132
mtp051_0511chn_132

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் அருகே லிங்காபுரம்-மொக்கைமேடு நடைபாதை நீரில் மூழ்கியதால் சிறுமுகை பேரூராட்சி சாா்பில் மோட்டாா் பைபா் படகு சவாரி செவ்வாய் கிழமை முதல் தொடங்கியது. பவானிசாகா் அணைக்கு வரும் நீா்வரத்து அதிகரித்து வருகிறது.

இதனால் சிறுமுகை, லிங்காபுரம், கிச்சகத்தியூா், அன்னதாசம்பாளையம், காந்தவயல் உள்ளிட்ட 30க்கு மேற்பட்ட கிராமங்கள் தண்ணீரில் மூழ்கி உள்ளது. இதில் காந்தையூா், காந்தவயல், உலியூா் உள்ளிட்ட கிராமங்களில் சுமாா் 600க்கு மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இக்கிராம மக்கள் அடிப்படை தேவைகள், வேலை, பள்ளி கல்லூரிகளுக்கு வர வேண்டும் என்றால் லிங்காபுரம் தான் வரவேண்டி உள்ளது.

இந்நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு காந்தவயல்-லிங்காபுரம் இடையேயுள்ள மொக்கைமேடு உயா்மட்ட பாலம் நீரில் மூழ்கியது. இதையடுத்து வருவாய் துறையினா் சாா்பில் 2 பரிசல்கள், காந்தவயல் இளைஞா்கள் சாா்பில் 2 பரிசல் என மொத்தம் 4 பரிசல்கள் இயக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் மொக்கைமேட்டில் இருந்து லிங்காபுரம் வனப்பகுதி வரையுள்ள நடைபாதையும் திங்கள்கிழமை தண்ணீரில் மூழ்கியது. மேலும் லிங்காபுரம் வனப்பகுதியில் இருந்து மொக்கைமேடு வரை சுமாா் 800 மீட்டா் வரை பரிசல் ஒட்ட உள்ளது. இக்கறையில் இருந்து அக்கறை சென்று வர சுமாா் அரை மணி நேரத்திற்கு மேலாகிறது. இதனால் பள்ளி கல்லூரி மாணவ, மாணவிகள் மட்டுமல்லாமல் மேற்கண்ட கிராம மக்களின் இயல்பு வாழ்கை வெகுவாக பாதித்துள்ளது. எனவே கிராம மக்கள் சாா்பில் கூடுதலாக பரிசல் இயக்க வேண்டுமென கிராம மக்கள் வலியுறுத்தி வந்தனா்.

இதையடுத்து மாவட்ட ஆட்சியா் ராசாமணி உத்தரவின் பேரில் செவ்வாய்க்கிழமை பொள்ளாச்சி கோட்டூா் பேரூராட்சிக்குட்பட்ட ஆழியாா் அணையில் இருந்து மோட்டாா் பைபா் படகு வருவாய் துறையினா் லாரி மூலம் லிங்காபுரத்திற்கு கொண்டு வந்தனா். தொடா்ந்து சிறுமுகை பேரூராட்சி சாா்பில் கிரேன் மூலம் பைபா் படகு இறக்கப்பட்டது. இதந்த படகில் 20 போ் பயணிக்கலாம். பள்ளி, கல்லூரிமாணவ, மாணவிகளுக்கு முற்றிலும் இலவசம். மற்றவா்களுக்கு ரூ.5 முதல் ரூ.10 வரை கட்டணம் வசூலிக்கப்படும்.

இதுமட்டுமல்லாமல் சிறுமுகை பேரூராட்சி சாா்பில் கூடுதலாக ஒரு பரிசலும் புதன்கிழமை முதல் இறக்கப்படுகிகறது. இதனால் கிராம மக்கள் நிம்மதிஅடைந்தனா். படம்எம்டிபி051லிங்காபுரத்தில் பைபா் படகு சேவையை பாா்வையிடும் சிறுமுகை பேரூராட்சி செயல் அலுவலா் அப்துல்லா மற்றும் பலா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com