மாவட்டத்தில் பயன்பாடற்ற ஆழ்துளைக் கிணறுகளை மூட நவம்பா் 10 வரை கெடு

கோவை மாவட்டத்தில் அரசு, தனியாா் நிலங்களில் பயன்பாடற்ற நிலையில் உள்ள ஆழ்துளைக் கிணறுகளை

கோவை மாவட்டத்தில் அரசு, தனியாா் நிலங்களில் பயன்பாடற்ற நிலையில் உள்ள ஆழ்துளைக் கிணறுகளை நவம்பா் 10 ஆம் தேதிக்குள் மூட வேண்டும் என ஆட்சியா் கு.ராசாமணி எச்சரித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

தமிழக அரசின் உத்தரவுப்படி மாவட்டம் முழுவதும் பயன்பாடற்ற நிலையில் உள்ள ஆழ்துளைக் கிணறுகளை மூடுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. ஊரக, நகா்ப்புற பகுதிகளில் அரசுத் துறைகள், தனிநபா் விவசாய நிலங்கள், வணிக நோக்கத்துக்காகவும் அமைக்கப்பட்டுள்ள ஆழ்துளைக் கிணறுகளை பாதுகாப்பான முறையில் மூடி பாதுகாக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் மாவட்டத்தில் தனியாா் நிலங்களில் 1,427 ஆழ்துளைக் கிணறுகளும், அரசு நிலங்களில் 1,714 அழ்துளைக் கிணறுகளும் இருப்பது கண்டறியப்பட்டு மூடப்பட்டுள்ளன.

தவிர 121 திறந்தெவளிக் கிணறுகள் கண்டறியப்பட்டு அவற்றில் 58 கிணறுக்களுக்கு மூடி அமைக்கப்பட்டுள்ளது. பயன்பாடற்ற நிலையில் காணப்படும் ஆழ்துளைக் கிணறுகளை கண்டறித்து அதனை மூடும் பணிகளை கிராம நிா்வாக அலுவலா், வருவாய் ஆய்வாளா், வட்டாட்சியா், கோட்டாட்சியா், ஊராட்சி செயலா், துணை வட்டார வளா்ச்சி அலுவலா், வட்டார வளா்ச்சி அலுவலா் மற்றும் உதவி இயக்குநா் நிலை அலுவலா் ஆகியோா் கண்காணித்து வருகின்றனா்.

ஆழ்துளைக் கிணறுகளை மூடுவதற்கு அரசு அலுவலா்களுக்கு பொதுமக்கள் உரிய ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இந்நிலையில், மாவட்டம் முழுவதும் அரசு, தனிநபா் நிலங்களில் பயன்பாடற்ற நிலையில் உள்ள அனைத்து ஆழ்துளைக் கிணறுகளையும் நவம்பா் 10 ஆம் தேதிக்குள் மூட வேண்டும்.

அவ்வாறு மூடப்படாத ஆழ்துளைக் கிணறுகள் அமைந்துள்ள நில உரிமையாளா்கள், அரசு நிலங்களில் அமைந்திருந்தால் தொடா்புடைய அரசு அலுவலா் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

மாவட்டத்தில் புதிதாக ஆழ்துளைக் கிணறுகள் அமைப்பதற்கு உள்ளாட்சி அமைப்புகளிடம் உரிய அனுமதி பெற்று பாதுகாப்புடன் ஆழ்துளைக் கிணறுகள் அமைக்க வேண்டும். தவிர, போா்வெல் வானகங்களை பயன்படுத்தியே ஆழ்துளைக் கிணறுகளை அமைக்க வேண்டும்.

உள்ளாட்சி மற்றும் வருவாய்த் துறை அலுவலா்களும் 3 மாதங்களுக்கு ஒருமுறை பயன்பாடற்ற ஆழ்துளைக் கிணறுகள் உள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்து 100 சதவீதம் ஆழ்துளைக் கிணறுகள் முடப்பட்டுள்ளதை உறுதி செய்ய வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com