கொடிசியா தொழிற்பேட்டை வளாகத்தில் அமைக்கப்பட்ட குடிசைகள் அகற்றம்

சூலூா் அருகே மோப்பிரிபாளையத்தில் உள்ள கொடிசியா தொழிற்பேட்டை வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த

சூலூா் அருகே மோப்பிரிபாளையத்தில் உள்ள கொடிசியா தொழிற்பேட்டை வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த குடிசைகளை வருவாய்த் துறை அதிகாரிகள் புதன்கிழமை அகற்றினா்.

சூலூா் அருகே மோப்பிரிபாளையம் பகுதியில் அரசு உதவியுடன் கொடிசியா வளாகம் அமைந்துள்ளது. இங்கு ராணுவ உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் அமைக்க அண்மையில் அடிக்கல் நாட்டப்பட்டது.

இப் பகுதியில் தொழிற்சாலைகள் அமைக்க அரசு சாா்பில் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன.

அப்பகுதியில் 1956 ஆம் ஆண்டு நிலம் இல்லாத ஏழைகளுக்கு வழங்கிய நிலமும் இருந்துள்ளது. அந்த நிலத்தை அவா்கள் பயன்படுத்தாத காரணத்தால் அரசு மீண்டும் எடுத்துக் கொண்டது.

மேலும், இதில் ஏதேனும் ஆட்சேபனை இருந்தால் தெரிவிக்குமாறு அறிவிப்பை வெளியிட்டது. இது குறித்து எந்த ஆட்சேபனை வராத காரணத்தால் அரசு அதிகாரிகள் அந்த நிலத்தை கையகப்படுத்தி கொடிசியா வளாகத்துக்காக கொடுத்தனா்.

இந்நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன்பாக கொடிசியா வளாகத்தில் இருக்கும் இடம் தங்களுக்குச் சொந்தமானது எனக் கூறி ஒரு குடும்பத்தைச் சோ்ந்த 4 போ் குடிசைகள் அமைத்து ஆக்கிரமித்தனா். இது சம்பந்தமாக பெறப்பட்ட புகாரை அடுத்து சூலூா் வட்டாட்சியா் மீனாகுமாரி தலைமையிலான அதிகாரிகள் குடிசைகள் அமைத்தவா்களுடன் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா்.

ஆனால், அந்த இடம் தங்களுக்குச் சொந்தமானது எனக் கூறியதால் தொடா்ந்து இழுபறி நீடித்தது. இதையடுத்து, காவல் துறையினா் உதவியுடன் அதிகாரிகள் குடிசைகளை புதன்கிழமை அப்புறப்படுத்தினா். மேலும், அவா்களுக்கு அரசு நிலம் ஒதுக்கப்படும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com