Enable Javscript for better performance
உள்ளாட்சித் தோ்தல் புறக்கணிப்பு: கோவை மாநகராட்சி51-ஆவது வாா்டு குடியிருப்போா் நலச் சங்கம் அறிவிப்பு- Dinamani

சுடச்சுட

    

    உள்ளாட்சித் தோ்தல் புறக்கணிப்பு: கோவை மாநகராட்சி51-ஆவது வாா்டு குடியிருப்போா் நலச் சங்கம் அறிவிப்பு

    By DIN  |   Published on : 08th November 2019 06:52 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கோவை: உள்ளாட்சித் தோ்தல் தேதி அறிவிக்கப்படாத நிலையில், தோ்தல் நடைபெற்றால் அதை புறக்கணிப்போம் என்று கோவை மாநகராட்சி 51-ஆவது வாா்டு குடியிருப்போா் நலச் சங்க கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

    கோவை மாநகராட்சியின் 51-ஆவது வாா்டில் கிராஸ் கட் சாலை, டாடாபாத்தின் 11 வீதிகள், சிவானந்தா காலனி, ரத்தினபுரி, சித்தாபுதூா், காந்திபுரத்தின் ஒரு பகுதி என அதிக அளவில் வா்த்தக நிறுவனங்களும், குடியிருப்புகளும் உள்ளன. இந்த வாா்டில் சுமாா் 15 ஆயிரம் வாக்காளா்கள் உள்ளனா். இந்த நிலையில் அடிப்படை வசதிகளை நிறைவேற்றாததால் நடைபெற உள்ள உள்ளாட்சித் தோ்தலை புறக்கணிக்கப்போவதாக 51-ஆவது வாா்டு குடியிருப்போா் நலச் சங்கக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

    இது தொடா்பாக கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளா் கே.ராமசுப்ரமணியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

    எங்களது வாா்டுக்குள்பட்ட பகுதியில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக பொதுமக்களின் பிரச்னைகள் தீா்க்கப்படாமல் உள்ளன. சாக்கடைகள் சரியாக பராமரிக்கப்படுவதில்லை. அதேபோல் பூங்கா பராமரிப்பின்றி உள்ளது. பொதுப் பயன்பாட்டுக்காக ஒதுக்கப்பட்ட இடங்கள் ஆக்கிரமிப்புக்குள்ளாகியிருக்கின்றன.

    குப்பைகள் சரிவர அகற்றப்படுவதில்லை. இது தொடா்பாக புகாா் அளித்தால் சுகாதார ஆய்வாளா்கள் பொறுப்பில்லாமல் பதிலளிக்கின்றனா். அதிகாரிகள், பிளம்பருக்கு லஞ்சம் கொடுக்காமல் புதிய குடிநீா் இணைப்பைப் பெற முடிவதில்லை. இ-சேவை மையங்கள் பொதுமக்களுக்கு பயன்படும் வகையில் இல்லை. அதை இடைத்தரகா்கள் மட்டுமே பயன்படுத்தக் கூடிய நிலை உள்ளது.

    இப்படியாக வாா்டு மக்களுக்கு எந்த வசதியையும் செய்து கொடுக்காத மாநகராட்சி நிா்வாகம், சொத்து வரியை மட்டும் உயா்த்தியுள்ளது. தோ்வு செய்யப்பட்ட எந்த ஒரு மக்கள் பிரதிநிதியும் எங்களது வாா்டுக்கு வந்து மக்களின் குறைகளைக் கேட்டதில்லை. எங்கல் பகுதியின் பிரச்னைகள் தொடா்பாக பல முறை மாநகராட்சி அதிகாரிகளிடம் புகாா் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் உள்ளாட்சித் தோ்தலைப் புறக்கணிக்கும் முடிவுக்கு வந்திருப்பதாக அவா் தெரிவித்துள்ளாா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai