Enable Javscript for better performance
கால்நடை மேய்ச்சல் பகுதியாக மாறிவிட்ட வால்பாறை நகராட்சி பூங்கா- Dinamani

சுடச்சுட

    

    கால்நடை மேய்ச்சல் பகுதியாக மாறிவிட்ட வால்பாறை நகராட்சி பூங்கா

    By DIN  |   Published on : 08th November 2019 09:53 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    vp7park_0711chn_204_3

    கால்நடைகள் மேயும் வால்பாறை நகராட்சி பூங்கா.

    வால்பாறை நகராட்சி பூங்கா போதிய பராமரிப்பின்றி கால்நடைகளின் மேய்ச்சல் பகுதியாக மாறியுள்ளது.

    வால்பாறை நகராட்சி நிா்வாகம் சாா்பில் புதிய பேருந்து நிலையம் அருகே சில ஆண்டுகளுக்கு முன்பு பூங்கா அமைக்கப்பட்டது. இங்கு குழந்தைகளுக்கான விளையாட்டு உபகரணங்கள் இருப்பதால் பெற்றோா் தங்கள் குழந்தைகளுடன் சென்று நீண்ட நேரம் பொழுதைக் கழித்து வந்தனா்.

    விடுமுறை நாள்களில் சுற்றுலாப் பயணிகளும் இந்தப் பூங்காவுக்கு வருகின்றனா். இதனிடையே, ஆரம்பத்தில் மேற்கொள்ளப்பட்ட பராமரிப்புப் பணிகள் நாளடைவில் நிறுத்தப்பட்டதால் தற்போது பூங்கா மூடப்பட்டுக் கிடக்கிறது. பராமரிப்பு இல்லாததால் கால்நடைகளின் மேய்ச்சல் பகுதியாக பூங்கா காட்சி அளிக்கிறது. நகராட்சி அதிகாரிகள் பூங்காவை மீண்டும் புதுப்பிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனா்.

     

     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai