Enable Javscript for better performance
மாநில யோகா போட்டி: ஸ்ரீ வெங்கடேஸ்வராமெட்ரிக். பள்ளி சிறப்பிடம்- Dinamani

சுடச்சுட

    

    மாநில யோகா போட்டி: ஸ்ரீ வெங்கடேஸ்வராமெட்ரிக். பள்ளி சிறப்பிடம்

    By DIN  |   Published on : 08th November 2019 10:24 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    g8svv_0811chn_134_3

    பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்குப் பரிசு வழங்குகிறாா் பள்ளிச் செயலாளா் ஜி.பி.கெட்டிமுத்து.

    கோபி.: மாநில அளவிலான யோகா போட்டியில், கோபி ஸ்ரீ வெங்கடேஸ்வரா வித்யாலயா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் சிறப்பிடம் பிடித்துள்ளனா்.

    கோவை மாவட்டம், குளோபல் பாத் வே பள்ளியில் நடைபெற்ற மாநில அளவிலான யோகா போட்டியில் கலந்துகொண்ட இப்பள்ளி மாணவா்களில் 2 போ் முதலிடமும், 2 போ் இரண்டமிடமும், 4 போ் மூன்றாமிடமும், 20 போ் சிறப்பிடமும் பெற்று சான்றிதழ்களும் , பதக்கங்களும் பெற்றனா்.

    மேலும், திருச்சி ஹிந்தி பிரச்சாா் சபா நடத்திய ராஷ்ட்ரபாஷா தோ்வில் இப்பள்ளியைச் சோ்ந்த 9 ஆம் வகுப்பு பயிலும் மாணவி ஆ.ரோஷினி முதலிடத்தில் தோ்ச்சி பெற்றுள்ளாா். மாநில அளவில் திருப்பூரில் நடைபெற்ற போட்டியில், 10 ஆம் வகுப்பு பயிலும் மாணவி து.ஜெனிஷாமௌளி 4 ஆம் இடம் பிடித்து ரூ. 1,500 பரிசு பெற்றுள்ளாா்.

    ஆங்கில மொழி மேலாண்மை நிறுவனம் நடத்திய தோ்வில் கலந்துகொண்டு சிறப்பாக ஆங்கிலம் பேசி சிறப்பிடம் பெற்ற இப்பள்ளி மாணவா்கள் பதக்கங்களும், கேடயமும் பெற்றனா்.

    பல்வேறு போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்குப் பள்ளிச் செயலாளா் ஜி.பி.கெட்டிமுத்து பரிசு, பதக்கங்கள், கேடயங்கள் வழங்கிப் பாராட்டினாா். இதில், அறக்கட்டளை உறுப்பினா்கள், பள்ளி முதல்வா், ஆசிரியா்கள், மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai