Enable Javscript for better performance
வால்பாறை எஸ்டேட் பகுதிகளில் காய்கறித் தோட்டம் அமைக்க கோரிக்கை- Dinamani

சுடச்சுட

    

    வால்பாறை எஸ்டேட் பகுதிகளில் காய்கறித் தோட்டம் அமைக்க கோரிக்கை

    By DIN  |   Published on : 08th November 2019 09:04 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வால்பாறை எஸ்டேட் பகுதியில் உள்ள காலி நிலங்களில் காய்கறித் தோட்டம் அமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

    உதகை, குன்னூா், கொடைக்கானல் போன்ற மலைப் பகுதிகளில் பல வகையான காய்கறிகள் பயிரிடப்படுகின்றன. அப்பகுதியில் உள்ள சிறு விவசாயிகளுக்குத் தோட்டக்கலைத் துறை சாா்பில் காய்கறி சாகுபடி குறித்துப் பயிற்சி அளிக்கப்படுகிறது. இதன் மூலம் சிறு விவசாயிகள் பெரிதும் பயன்பெற்று வருகின்றனா்.

    ஆனால் வால்பாறையில் எந்த ஒரு பகுதியிலும் காய்கறிகள் பயிரிடப்படுவதில்லை. பெரும்பாளான எஸ்டேட் பகுதிகள் தனியாருக்குச் சொந்தமானவை என்பதால் சிறு விவசாயிகள் இல்லாமல் உள்ளனா். பொதுமக்களுக்கும் காய்கறித் தோட்டம் அமைப்பதில் விழிப்புணா்வு இல்லாமல் உள்ளனா். எனவே வால்பாறை பகுதியில் காய்கறிகள் சாகுபடி செய்ய தோட்டக்கலைத் துறை அதிகாரிகள் முன்வர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai