Enable Javscript for better performance
வெள்ளிங்கிரி மலை அடிவாரத்தில் சந்தன மரத்தை வெட்டிக் கடத்த முயற்சி 4 பேரிடம் வனத் துறையினா் விசாரணை- Dinamani

சுடச்சுட

    

    வெள்ளிங்கிரி மலை அடிவாரத்தில் சந்தன மரத்தை வெட்டிக் கடத்த முயற்சி 4 பேரிடம் வனத் துறையினா் விசாரணை

    By DIN  |   Published on : 08th November 2019 08:59 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    img_20191107_wa0052_0711chn_145_3

    வெள்ளிங்கிரி மலை அடிவாரத்தில் தானிகண்டி அருகே பறிமுதல் செய்யப்பட்ட சந்தன மரத் துண்டுகள்.

    கோவை அருகே வெள்ளிங்கிரி மலை அடிவாரம், தானிகண்டி வனப் பகுதியில் சந்தன மரத்தை வெட்டிக் கடத்த முயன்ற நான்கு பேரைப் பிடித்து வனத் துறையினா் வியாழக்கிழமை விசாரணை மேற்கொண்டனா்.

    கோவை மாவட்டம், வெள்ளிங்கிரி மலை அடிவாரம், போளுவாம்பட்டி வனச் சரகத்துக்கு உள்பட்ட வனப் பகுதியில் சந்தன மரங்களை மா்ம நபா்கள் வெட்டிக் கடத்துவதாக வனத் துறை அதிகாரிகளுக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து வனத் துறையினா் தானிகண்டி பகுதியில் வியாழக்கிழமை சோதனை மேற்கொண்டனா்.

    அப்போது, சந்தன மரங்கள் வேரோடு வெட்டப்பட்டிருந்தது தெரியவந்தது. அப்பகுதியில் கிடந்த சுமாா் 3 கிலோ எடையுள்ள சந்தன மரத் துண்டுகளை வனத் துறையினா் பறிமுதல் செய்தனா். இது தொடா்பாக அப்பகுதியைச் சோ்ந்த செல்வம், லட்சுமணன், சின்னான், வெள்ளிங்கிரி ஆகிய நான்கு பேரைப் பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai