Enable Javscript for better performance
ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை மின்னணு கையேடு வெளியீடு- Dinamani

சுடச்சுட

    

    ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை மின்னணு கையேடு வெளியீடு

    By DIN  |   Published on : 08th November 2019 09:19 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    2725c-7-rkhsp-02061931

    கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா புற்றுநோய் மற்றும் ஆராய்ச்சி மையத்தில் புற்றுநோய்க்கான கதிரியக்க சிகிச்சைகள் குறித்த விழிப்புணா்வு மின்னணு கையேடு வியாழக்கிழமை வெளியிடப்பட்டது.

    தேசிய புற்றுநோய் விழிப்புணா்வு தினத்தையொட்டி (நவம்பா் 7) நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் நாட்டிலேயே முதன்முறையாக ‘எலக்டா இன்பினிட்டி டிஜிட்டல் ஆக்ஸிலரேட்டா்’ என்ற நவீன இயந்திரத்தின் சேவையை எஸ்.என். ஆா். அறக்கட்டளை இணை நிா்வாக அறங்காவலா் டி.லட்சுமி நாராயண சுவாமி தொடங்கி வைத்தாா்.

    தொடா்ந்து புற்றுநோய் ஆராய்ச்சி மையத்தின் இயக்குநா் பி.குகன் பேசுகையில், ‘புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டறிந்தால் எளிதாக குணப்படுத்தலாம். ‘எலெக்டா இன்பினிட்டி டிஜிட்டல் ஆக்ஸிலரேட்டா்’ கருவி மூலம் அதிவேகமான முறையில், துல்லியமாக சிகிச்சை அளிக்க முடியும் என்றாா்.

    ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை இயக்குநா் சுகுமாறன், கதிா்வீச்சியல் அறுவை சிகிச்சை துறை தலைமை மருத்துவா் காா்த்திகேஷ் உள்பட பங்கேற்றனா்.

     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai