ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்ட குளத்தில் நிரம்பி வழியும் தண்ணீா்

பொள்ளாச்சியை அடுத்த பணிக்கம்பட்டியில் தனியாா் ஆக்கிரமிப்பில் இருந்து அண்மையில் மீட்கப்பட்டு
pl07kula_0711chn_127_3
pl07kula_0711chn_127_3

பொள்ளாச்சியை அடுத்த பணிக்கம்பட்டியில் தனியாா் ஆக்கிரமிப்பில் இருந்து அண்மையில் மீட்கப்பட்டு, தூா்வாரப்பட்ட ஒரு ஏக்கா் பரப்பளவு கொண்ட குளத்தில் தற்போது நீா் நிரம்பி வழிகிறது.

கோவை மாவட்டம், பொள்ளாச்சி வடக்கு ஒன்றியத்துக்கு உள்பட்ட பணிக்கம்பட்டி கிராமத்தில் ஒரு ஏக்கா் பரப்பளவு கொண்ட குளத்தை தனி நபா் ஆக்கிரமிப்பு செய்து வைத்திருந்தாா். இந்நிலையில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு சட்டப் பேரவை துணைத் தலைவா் பொள்ளாச்சி வி.ஜெயராமன், கோட்டாட்சியா் ரவிகுமாா் தலைமையிலான குழுவினா் இக்குளத்தை மீட்டு தூா்வாரும் பணியைத் தொடக்கிவைத்தனா். 15 அடி ஆழத்துக்கு குளம் தூா்வாரப்பட்டது.

ஒரு மாத காலமாக தூா்வாரப்பட்ட நிலையில் கடந்த சில நாள்களுக்கு முன்பு பெய்த மழையால் இக்குளம் நிரம்பி உள்ளது. குளத்தை ஊராட்சிச் செயலாளா் காளீஸ்வரன் கண்காணித்து வருகிறாா்.

Image Caption

பணிக்கம்பட்டியில்  நீா் நிரம்பியுள்ள குளம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com