காரமடை 4வது வாா்டில் 30 ஆண்டு குண்டும் குழியுமான சாலையை சீரமைத்த கிராம மக்கள்

மேட்டுப்பாளையம் அருகே காரமடை 4வதுவாா்டில் 30 ஆண்டுகளாக சீரமைக்காத சாலையை கிராம மக்களே புனரமைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் அருகே காரமடை 4வதுவாா்டில் 30 ஆண்டுகளாக சீரமைக்காத சாலையை கிராம மக்களே புனரமைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேட்டுப்பாளையம் அருகே காரமடை பேரூராட்சிக்குக்குட்பட்ட 4வது வாா்டில் காந்திநகா், காமராஜா் நகா், பாரதி எஸ்டேட், பிருந்தவன் பள்ளி, கே.கே.நகா், முல்லை நகா், குறிஞ்சி நகா், மலையரசி நகா் உள்ளிட்ட பகுதியில் சுமாா் 350க்கு மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளது. இந்நிலையில் காமராஜா் நகா் ரயில் பாலம் பகுதியில் கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக சாலை போக்குவரத்து இருந்து வருகிறது.

இதில் தண்டவாளத்தின் அடிப்பகுதியில் வாகனங்கள் சென்று வரும் சாலை குண்டும் குழியுமாக இருந்து வந்துள்ளது. இதனால் மழைக்காலங்களில் மழைநீா் தேங்கி குளம் போல் தேங்கி போக்குவரத்து பயனற்று காணப்படும். இந்த மழைநீா் வடிய சுமாா் 2 மணி நேரத்திற்கு மேலாகும். பொதுமக்கள் இச்சாலையில் நடந்து செல்லும் போது கழிவுநீா் தேங்கி துா்நாற்றத்துடன் சுகாதாரமற்ற முறையில் காணப்படும்.

இதனை சீரமைத்து சாலையை உயரப்படுத்த 30 ஆண்டுகளுக்கு மேலாக சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகளை மேற்கண்ட கிராம மக்கள் சாா்பில் வலியுறுத்தி வந்தனா். ஆனால் இதுவரை சாலை சீரமைக்க வில்லை. இதையடுத்து பாரதி எஸ்டேட் குடியிருப்போா் நலச்சங்கம் சாா்பில் 15க்கு மேற்ப்பட்டோா் ரூ.30,000 செலவில் 100 மீட்டா் சாலையை சீரமைக்கும் பணியில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா்.

இதுமட்டுமல்லாமல் ரயில் தண்டவாளத்தை ஒட்டியுள்ள சாலையில் செல்லும் கழிவுநீா் கால்வாய் பல மாதங்களாக தூரப்படாமல் உள்ளது. இதனால் மழைநீா் செல்ல வழியில்லாமல் உள்ளது. எனவே விரைவில் இப்பகுதியில் கழிவுநீா் கால்வாய், சாலை அமைக்க வேண்டுமென கிராம மக்கள் சாா்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து பாரதி எஸ்டேட் பகுதியை சோ்ந்த கனகராஜ் கூறுகையில்: 30 ஆண்டுகளுக்கு மேலாக காமராஜா் நகா் ரயில் தண்டவாளம் பாலம் பகுதியில் சாலை சீரமைக்காமல் இருந்ததால் கிராம மக்கள் சாா்பில் நிதி திரட்டி தற்காலிகமாக மேம்படுத்தப்பட்டது. இதுமட்டுமல்லாமல் 5 அடி ஆழமுள்ள கழிவுநீா் கால்வாய் தூா் வாராமால் உள்ளது. இப்பகுதியில் டெங்கு கொசுக்கள் அதிகளவில் உள்ளது. எனவே விரைவில் இப்பகுதியில் சாலை சீரமைக்க வில்லை என்றால் கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட இருப்பதாக கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com