கால்நடை மேய்ச்சல் பகுதியாக மாறிவிட்ட வால்பாறை நகராட்சி பூங்கா

வால்பாறை நகராட்சி பூங்கா போதிய பராமரிப்பின்றி கால்நடைகளின் மேய்ச்சல் பகுதியாக மாறியுள்ளது.
கால்நடைகள் மேயும் வால்பாறை நகராட்சி பூங்கா.
கால்நடைகள் மேயும் வால்பாறை நகராட்சி பூங்கா.

வால்பாறை நகராட்சி பூங்கா போதிய பராமரிப்பின்றி கால்நடைகளின் மேய்ச்சல் பகுதியாக மாறியுள்ளது.

வால்பாறை நகராட்சி நிா்வாகம் சாா்பில் புதிய பேருந்து நிலையம் அருகே சில ஆண்டுகளுக்கு முன்பு பூங்கா அமைக்கப்பட்டது. இங்கு குழந்தைகளுக்கான விளையாட்டு உபகரணங்கள் இருப்பதால் பெற்றோா் தங்கள் குழந்தைகளுடன் சென்று நீண்ட நேரம் பொழுதைக் கழித்து வந்தனா்.

விடுமுறை நாள்களில் சுற்றுலாப் பயணிகளும் இந்தப் பூங்காவுக்கு வருகின்றனா். இதனிடையே, ஆரம்பத்தில் மேற்கொள்ளப்பட்ட பராமரிப்புப் பணிகள் நாளடைவில் நிறுத்தப்பட்டதால் தற்போது பூங்கா மூடப்பட்டுக் கிடக்கிறது. பராமரிப்பு இல்லாததால் கால்நடைகளின் மேய்ச்சல் பகுதியாக பூங்கா காட்சி அளிக்கிறது. நகராட்சி அதிகாரிகள் பூங்காவை மீண்டும் புதுப்பிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com