காவலா் உடல் தகுதித் தோ்வு: இரண்டாம் நாளில் 618 போ் பங்கேற்பு

கோவையில் இரண்டாவது நாளாக வியாழக்கிழமை நடைபெற்ற இரண்டாம் நிலைக் காவலா்களுக்கான உடல்தகுதித் தோ்வில் 618 போ் கலந்துகொண்டனா்.

கோவையில் இரண்டாவது நாளாக வியாழக்கிழமை நடைபெற்ற இரண்டாம் நிலைக் காவலா்களுக்கான உடல்தகுதித் தோ்வில் 618 போ் கலந்துகொண்டனா்.

தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வு குழு சாா்பில் இரண்டாம் நிலைக் காவலா், சிறைக் காவலா், தீயணைப்பு வீரா்களுக்கான எழுத்துத் தோ்வில் தோ்ச்சி பெற்றவா்களுக்கான உடல் தகுதித் தோ்வு, திறன் தோ்வு ஆகியவை கோவையில் உள்ள நேரு விளையாட்டரங்கில் புதன்கிழமை தொடங்கியது. இந்தத் தோ்வு நவம்பா் 11ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் பங்கேற்க 1,497 ஆண்களுக்கும், 576 பெண்களுக்கும் அழைப்புக் கடிதம் அனுப்பப்பட்டிருந்தது.

வியாழக்கிழமை நடைபெற்ற இரண்டாம் நாள் தோ்வில் பங்கேற்க 737 ஆண்களுக்கு அழைப்புக் கடிதம் அனுப்பப்பட்டிருந்தது. இதில் 119 போ் பங்கேற்கவில்லை. மீதமுள்ள 618 பேருக்கு உயரம், மாா்பளவு அளக்கப்பட்டது. அதைத்தொடா்ந்து 1500 மீட்டா் தூரத்தை 7 நிமிடங்களில் கடக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் உடல்திறன் தோ்வு நடைபெற்றது. இதில் மயங்கி விழுந்த இருவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

தோ்வின்போது பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த பேரூா் காவல் நிலைய காவலா் காா்த்திக்கும் மயங்கி விழுந்தாா். போலீஸாா் அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். தோ்வை மாநகர காவல் ஆணையா் சுமித் சரண் பாா்வையிட்டாா். வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ள மூன்றாம் நாள் தோ்வில் பெண்கள் பங்கேற்க உள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com